குறும்செய்திகள்

நடமாடும் வர்த்தகர்கள் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து : அமைச்சர் நாமல் ராஜபக்ஷ.!

License will be revoked if mobile traders sell goods at higher prices

“காய்கறி மற்றும் பழங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தொடர்பில் அலரி மாளிகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டாலும் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வருகை குறைந்த அளவிலேயே காணப்பட்டதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், இன்றும் மரக்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

License will be revoked if mobile traders sell goods at higher prices

Related posts

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

Tharshi

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது..!

Tharshi

ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

Tharshi

Leave a Comment