குறும்செய்திகள்

தளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்..!

Thalapathy 65 Latest Update

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படக்குழுவினர் புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள்.

இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய்யின் 65 வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக “தளபதி 65” என அழைத்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Thalapathy 65 Latest Update

Related posts

லிஃப்ட் விபத்தில் 30 வயது நபர் உயிரிழப்பு..!

Tharshi

கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி விசாரணை..!

Tharshi

2வது டி20 : இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி..!

Tharshi

Leave a Comment