குறும்செய்திகள்

ஆபாச பேச்சில் கோடிகளை குவித்த பப்ஜி மதன் கைது..!

Youtuber Pubg Madan Arrested in Dharmapuri

மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம் பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இது தொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பல நாட்களாக தலைமறைவாக இருந்த மதனை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் தர்மபுரியில் வைத்து கைது செய்துள்ளனர். மதனை இன்று மாலைக்குள் சென்னைக்கு அழைத்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மதனின் மனைவி கிருத்திகாவை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Youtuber Pubg Madan Arrested in Dharmapuri

Related posts

10-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் வாரிசு நடிகர்..!

Tharshi

வெப் தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண் பலாத்காரம்..!

Tharshi

Leave a Comment