குறும்செய்திகள்

20-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

20th June Today Raasi Palankal

இன்று ஜூன் 20.2021

பிலவ வருடம், ஆனி 6, ஞாயிற்றுக்கிழமை, 20.6.2021
வளர்பிறை, தசமி திதி மதியம் 12:42 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, சித்திரை நட்சத்திரம் மதியம் 3:41 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சூரியபகவான் வழிபாடு, கரிநாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வருமானம் சற்றே திருப்தி தரும். நட்பால் நன்மை ஏற்படும்.
பரணி: புதிய எதிர்பாலினத்தவர் அறிமுகமாகி நன்மை செய்வார்.
கார்த்திகை 1: சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நீங்கள் மதிக்கும் ஒருவரின் ஆதரவு மகிழ்ச்சி உண்டாக்கும்.
ரோகிணி: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் ஏற்பட்டுப் பிறகு நீங்கும்
மிருகசீரிடம் 1,2: நண்பர்களால் தேவையற்ற அலைச்சல் இருக்கக்கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வயிற்றில் பாதிப்புகள் ஏற்படாமல் கவனம் தேவை.
திருவாதிரை: சிறு பிரச்னையை எதிர்கொள்வீர்கள். அரசின் ஆதரவு கிட்டும்.
புனர்பூசம் 1,2,3: வரவு சுமாராக இருக்கும். எதிர்பாலினத்தால் நன்மை உண்டு.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களால் சிறியதாக ஒரு திடீர் நன்மை வரக்கூடும்.
பூசம்: மனதில் நிலவிய சோர்வு நீங்கும். நண்பர்கள் தன்னம்பிக்கை ஊட்டுவர்.
ஆயில்யம்: அன்றாடப் பணிகளில் தனித்திறனால் நல்ல பெயரெடுப்பீர்கள்.

சிம்மம் :

மகம்: வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம்: செலவுகள் சற்று அதிகரிக்கும். பண வரவு சிறிதளவு உண்டு.
உத்திரம் 1: சுறுசுறுப்பாகச் செயல்பட்டு இன்றைய நாளைச் சிறப்பாக்குவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். உற்சாகம் குறையாது.
அஸ்தம்: பணியிடத்தில் இருந்த நீண்டநாள் பிரச்னை நண்பர்களால் தீரும்.
சித்திரை 1,2: மனச்சாட்சி அனுமதிக்காத செயல் எதையும் செய்ய வேண்டாம்.

துலாம்:

சித்திரை 3,4: நண்பர்களிடையே இருந்த பிரச்னை விலகிக் கலகலப்பு வரும்.
சுவாதி: அக்கம்பக்கத்தினரிடம் எக்காரணம் கொண்டும் பகை வேண்டாம்.
விசாகம் 1,2,3: உங்களுக்கு ஏற்கனவே உள்ள கவர்ச்சி கூடுதலாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
அனுஷம்: சுபநிழ்ச்சி கைகூடும். தீய பழக்கம் விலகும். தாயாருக்கு நன்மை வரும்.
கேட்டை: குழந்தைகளின் செயலால் மகிழக்கூடிய சம்பவம் நடக்கும்.

தனுசு:

மூலம்: சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும்.
பூராடம்: கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றப் பாடுபட வேண்டியிருக்கும்.
உத்திராடம் 1: குடும்பத்தில் ஒருவரின் உழைப்பு நல்ல பலன் தரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: லாபம் குறைந்தாலும் தடைபடாது. குடும்பம் இணையும்.
திருவோணம்: பிள்ளைகளால் இழந்த நிம்மதி அவர்களாலேயே மீளும்.
அவிட்டம் 1,2: தொடர்புகள் விரிவடையும். முயற்சியில் தடை நேரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: புதியவரிடம் கவனமாகப் பழகுங்கள். பேச்சைக் குறையுங்கள்.
சதயம்: எதிர்ப்புகள் குறையும். எச்சரிக்கை உணர்வு காரணமாகத் தப்புவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: பணியை மிகுந்த சிரமத்துடனேயே முடிப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவீர்கள்.
உத்திரட்டாதி: அநீதியான செயல்கள் செய்யத் துாண்டும் நபர்கள் சகவாசம் வேண்டாம்.
ரேவதி: முயற்சியை அதிகரிக்க வேண்டி வரும். அமைதியுடன் செயல்படுங்கள்.

20th June Today Raasi Palankal

Related posts

குழந்தைகளுக்கு கண்டிப்பாக தரக்கூடாத உணவுகள் எவையென தெரியுமா..?

Tharshi

அந்த விஷயத்தில் விஜய் தான் எனக்குப் பொருந்துவார் : சீரியல் நடிகையின் சர்ச்சை பேச்சு..!

Tharshi

யாழ் மண்ணின் பெருமையை புகழ்பாடும் Thiruppan (திருப்பன்) பாடல்..!

Tharshi

Leave a Comment