குறும்செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Coronavirus Updates in India

இந்தியாவில் தொடர்ந்து 37-வது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60,753- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 97,743- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,647- பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து 37-வது நாளாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அந்தவகையில், இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2.98- சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 019- ஆக சரிந்துள்ளது.

Coronavirus Updates in India

Related posts

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு சிறைத்தண்டனை : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை..!

Tharshi

உணவில் உப்பு அதிகமானால் ஏற்படும் பிரச்சனைகள்..!

Tharshi

யாழில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் திடீரென உயிரிழப்பு..!

Tharshi

Leave a Comment