குறும்செய்திகள்

ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்கும் இன்ஸ்டாகிராம்..!

Instagram has added ads to Reels

இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியின் ரீல்ஸ் பகுதியில் விளம்பரங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனை தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியில் உங்களை பாளோ செய்யாதவர்களையும் விளம்பரம் மூலம் சென்றடைய முடியும்.

இதனால் அதிக பாளோவர்கள் இல்லாத சிறு வியாபாரங்கள், பிராண்டுகள் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும். பிராண்டுகள் மற்றும் க்ரியேட்டர்கள் முன்பை விட அதிக பிரபலமாக ரீல்ஸ் விளம்பரங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

விளம்பரங்கள் வழக்கமான ரீல்ஸ் போஸ்ட்களை போன்றே புல் ஸ்கிரீன் மற்றும் செங்குத்தாக தோன்றும். ஏற்கனவே ஸ்டோரிக்களில் வரும் விளம்பரங்களை போன்று இவை ரீல்ஸ்களின் இடையே வரும்.

அதிகபட்சமாக 30 நொடிகள் வரை ரீல்ஸ் விளம்பரங்களை பதிவிட முடியும். ரீல்ஸ் பகுதியில் வரும் விளம்பரங்களுக்கு மற்ற பயனர்கள் லைக், கமென்ட், சேவ் மற்றும் ஷேர் செய்யலாம்.

Instagram has added ads to Reels

Related posts

21-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

காதலனுடன் புத்தாண்டை சிறப்பித்த தமன்னா..!

Tharshi

டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு..!

Tharshi

Leave a Comment