குறும்செய்திகள்

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யோகிபாபு..!

Tamil Actor Yogibabu playing cricket

காமெடி நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் வலம் வரும் யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “மண்டேலா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், தற்போது நடிகர் யோகிபாபு “அரண்மனை-3”, “கடைசி விவசாயி”, “டிக்கிலோனா” உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Tamil Actor Yogibabu playing cricket

Related posts

அந்த நடிகருக்கு அம்மாவாக நடிப்பதா..? : ஓட்டம் பிடித்த நடிகை..!

Tharshi

20-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

04-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment