குறும்செய்திகள்

ஆன்லைன் கிளாஸ் பரிதாபம் : 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய 13 வயது சிறுவன்..!

13 year old boy made his 15 year old sister pregnant

ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம் பார்த்து வந்த 13 வயது சிறுவன் ஒருவன், தன்னுடைய 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கொடுமையான சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., 

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்க பெரிய வரப்பிரசாதம் என்றாலும், அதன் தீமைகளும் அதிகம். குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் பயன்படுத்துகிறார்கள்.

செல்போனில் ஆன்லை வகுப்புக்காக குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதால், அவர்கள் ஆபாசமான மற்றும் தேவையற்ற தகவல்களை பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சகோதரர் தனது 15 வயது சகோதரியுடன் செல்போனில் ஆபாச வீடியோவைப் பார்த்துள்ளார். பின்னர், இருவரும் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் தற்போது சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இந்தக் கொடுமையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பொலிசார் கூறும் போது..,

“மகாராஷ்டிரா மாநிலம வர்தா அடுத்த சேவாகிராமை சேர்ந்த தொழிலாளி தனது குடும்பத்தினருடன் பிவாடியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 15 வயது மகளும், 13 வயது மகனும் உள்ளனர்.

இவர்களுக்கு ஆன்லைன் மூலம் பள்ளி படிப்புகளை கற்று வந்தனர். இருவரும், ஒன்றாக சேர்ந்து மொபைல் போனில் படித்து வந்த நிலையில், அவ்வப்போது செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளனர். அதன்பின், இருவரும் ஆபாச படங்களில் வரும் காட்சிகளை பார்த்து ‘செக்ஸ்’ வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

சில மாதங்களுக்குப் பிறகு, சிறுமியின் பாட்டி பிவாடிக்கு வந்திருக்கிறார். தனது பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதைப் பார்த்து குழப்பமடைந்தார். அந்த சமயத்தில் சிறுமியும் அவ்வப்போது வாந்தி எடுத்துவந்தார். அடிக்கடி சோர்ந்த நிலையில் படுத்தே இருந்தார். சந்தேகமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் அவரது 13வயது தம்பி என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட சகோதரன் மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரி ஆகிய இருவரின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சகோதரன், சகோதரி ஆகிய இருவருக்கும் இதுபற்றி எந்த புரிதலும் இல்லை. குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் படிக்கும் போது, பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்” என்று பொலிசார் தெரிவித்தனர்.

13 year old boy made his 15 year old sister pregnant

Related posts

தொண்டமனாறு கடற்பரப்பில் 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது..!

Tharshi

ஊரடங்கிற்கு எதிராக லண்டனில் போராட்டம் : 3 பொலிஸ் அதிகாரிகள் காயம்..!

Tharshi

நாகார்ஜுனா தான் அதற்கு மிகவும் பொருத்தமானவர் : சமந்தா பரிந்துரை..!

Tharshi

Leave a Comment