குறும்செய்திகள்

21-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

21st June Today Raasi Palankal

இன்று ஜூன் 21.2021

பிலவ வருடம், ஆனி 7, திங்கட்கிழமை, 21.6.2021
வளர்பிறை, ஏகாதசி திதி காலை 10:23 வரை,
அதன்பின் துவாதசி திதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 2:10 வரை,
அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : ஏகாதசி விரதம், முகூர்த்த நாள்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: தேவையற்ற விஷயம் எதிலும் தலையிடாமல் இருங்கள்.
பரணி: பணவரவு ஓரளவுதான் இருக்கும். கூடவே சில செலவுகளும் ஏற்படும்.
கார்த்திகை 1: உணவு, துாக்கம் பற்றிய ஆரோக்யம் கெடாமல் கவனமாக இருங்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உங்களின் செல்வமும், செல்வாக்கும் கூடும் நாள் இது.
ரோகிணி: அரசு பணியாளர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாள்.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் விரும்பிய நன்மையை அடைய முயற்சி எடுப்பீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உஷ்ணம் தொடர்பான நோய்கள் வராமல் காத்துக்கொள்ளுங்கள்.
திருவாதிரை: எந்தச் செயலையும் பரபரப்பின்றிச் செய்து வெற்றி காண்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: சிறு சிறு அனுகூலங்கள் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: உங்களின் முயற்சிக்குத் தக்கபடி வெற்றித் தேடி வரும்.
பூசம்: வாகனங்களையும், இயந்திரங்களையும் இயக்கும்போது கவனமாக இருங்கள்.
ஆயில்யம்: தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு மட்டுமே லாபம் வரும்.

சிம்மம் :

மகம்: முயற்சியை அதிகப்படுத்துவது நல்லது. சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
பூரம்: ஒவ்வொரு செயலிலும் அதிகக் கவனம் செலுத்துங்கள்
உத்திரம் 1: பெற்றோர் உடல் நலத்தில் அலட்சியப்போக்கு வேண்டாம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பெரிய தொகையை இன்று எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.
அஸ்தம்: உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
சித்திரை 1,2: தந்தையால் நன்மை உண்டு. பேராசையால் சிரமப்பட வேண்டாம்.

துலாம்:

சித்திரை 3,4: யாரையும் ஏமாற்றும் எண்ணம் வராதபடி காத்துக் கொள்ளுங்கள்.
சுவாதி: வர்த்தக முதலீடுகளைச் சற்றுத் தள்ளிப்போடுவது நல்லது.
விசாகம் 1,2,3: பணியிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: யாரை நம்பியும் உங்கள் வேலை எதையும் ஒப்படைக்காதீர்கள்.
அனுஷம்: சிலர் திட்டமிட்டே கூட உங்களை சிரமத்தில் தள்ளக்கூடும்.
கேட்டை: பழைய திட்டத்துக்காக முழு ஈடுபாட்டுடன் முயற்சி செய்வீர்கள்.

தனுசு:

மூலம்: தீயவர்களின் நட்பு வேண்டாம். முயற்சிகள் நல்லபடியாக முடியும்.
பூராடம்: சின்ன விஷயத்தையும் முயன்றுதான் முடிக்கவேண்டி இருக்கும்.
உத்திராடம் 1: உணவுப் பழக்கத்தில் மிகுந்த கவனமாக இருங்கள்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சொத்து விற்பதில் சிறிய தடை ஏற்பட்டாலும் அவை நீங்கும்.
திருவோணம்: தன்னம்பிக்கை கூடும். செல்வாக்கு அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மன அடக்கம் தேவை.

கும்பம்:

அவிட்டம் 3,4: தெளிவாகச் சிந்தித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.
சதயம்: வேலைக்கு முயற்சிப்போருக்கு நற்செய்தி ஒன்று கிடைக்கும்.
பூரட்டாதி 1,2,3: தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படாமல் பேசுங்கள். பொறுமை தேவை.

மீனம்:

பூரட்டாதி 4: பிள்ளைகளின் உயர்கல்வி பற்றிய கவலைகள் வந்து போகும்
உத்திரட்டாதி: பிற மொழி பேசுபவர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்
ரேவதி: பொறுப்புடன் செயல்பட்டால் பிரச்னை வராது. செயலில் கவனம் தேவை.

21st June Today Raasi Palankal

Related posts

இன்றைய ராசி பலன்கள்

Tharshi

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்..!

Tharshi

மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய புது ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சாம்சங்..!

Tharshi

Leave a Comment