குறும்செய்திகள்

சூப்பரான பாகற்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாமா..!

Bitter Gourd Pickle Recipe In Tamil

பாகற்காய் ஊறுகாய் மிகவும் அருமையாக இருக்கும். சாதத்துடன் இதனை சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

அந்தவகையில் இன்று இந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள் :

பிஞ்சு பாகற்காய் – கால் கிலோ
தக்காளி, எலுமிச்சம்பழம் – தலா ஒன்று
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கடுகு, பெருங்காயத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* பாகற்காயை கழுவி, ஈரம் போகத் துடைத்து, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ளவும்.

* தக்காளி, பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.

* எல்லா காய்களையும் ஒன்று சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, காய்கறி கலவையைக் சேர்த்துக் கிளறி, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.

* இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கினால்…, பாகற்காய் ஊறுகாய் தயார்..!

Bitter Gourd Pickle Recipe In Tamil

Related posts

28-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதி..!

Tharshi

பிரான்சில் வீடு ஒன்றில் அழுகிய நிலையில் இரு குழந்தைகளின் உடல்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment