குறும்செய்திகள்

வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் திடீர் மாயம் : சிக்கியது வீடியோ ஆதாரம்..!

Jeep driver suicide in Kodaikkanal Lake

வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவரை திடீரென காணாமல் போனதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து கொடைக்கானல் பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயதுடைய ஜெசீந்திரன். இவர் ஒரு ஜீப் டிரைவர். கொடைக்கானல் பகுதியில் முக்கிய அறிவிப்புகள் ஏதாவது நடந்தால், அதை தண்டோரா போட்டு சொல்வது வழக்கம். ஜீப் மூலம் தண்டோரா அறிவிக்கும் பணியை இவர்தான் அங்கு செய்து வந்தார்.

இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் தூங்கப் போயுள்ளார்.

ஆனால் விடிகாலையில் மனைவி திடீரென கண்விழித்தபோது, அவரை காணவில்லை.. யாரிடமும் சொல்லாமல் ஜெசீந்திரன் எங்கோ கிளம்பி சென்றுவிட்டிருந்தார். வெளியில் இருந்த ஜீப்பையும் காணவில்லை. இதனால், மனைவி வேளாங்கண்ணி, கணவரை தேடியுள்ளார். ரூமில் செல்போன் மட்டும் இருந்தது. அதில் ஒரு வீடியோ போட்டு வைத்திருந்தார் ஜெசீந்திரன். அந்த வீடியோவை வேளாங்கண்ணி ஆன் செய்து பார்த்தார்.

அதில், “அளவுக்கு அதிகமான மன உளைச்சலில் இருக்கிறேன். அதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இந்த முடிவுக்கு என்னுடைய குடும்பத்தார்களோ, உறவினர்களோ யாரும் காரணம் இல்லை. என் மனைவி, மகன், மகளை தயவுசெய்து நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று உருக்கமாக பேசி வைத்திருந்தார்.

இதைப் பார்த்து ஷாக் ஆன வேளாங்கண்ணி, சொந்தக்காரர்களை அழைத்து கொண்டு பல இடங்களில் தேடி சென்றார். இந்த சமயத்தில்தான், நட்சத்திர ஏரியில் ஒரு ஆண் பிணம் மிதப்பாக கொடைக்கானல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பொலிசார், தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுனர். சடலத்தையும் மீட்டனர். அப்போதுதான், அது ஜெசீந்திரனின் சடலம் என்பது உறுதியானது. விடிகாலை வீட்டில் இருந்து வந்தவர், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, போஸ்ட் மார்ட்டத்துக்கு அந்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜெசீந்திரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று இதுவரை தெரியவில்லை. ஒரு க்ளூவும் இதுவரை கிடைக்கவில்லை. குடும்ப பிரச்சனையும் இல்லை. பொலிசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் கொடைக்கானலையே அதிர வைத்துள்ளது.

Jeep driver suicide in Kodaikkanal Lake

Related posts

வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு : கைதாகிறார் இம்ரான் கான்..!

Tharshi

2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 118 ரன்கள் பெற்ற இங்கிலாந்து..!

Tharshi

ரூ.3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் களம் இறங்கும் தென்னிந்திய திரைப்பட நிறுவனம்..!

Tharshi

Leave a Comment