குறும்செய்திகள்

100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சீனா சாதனை..!

Record of vaccinating 100crore doses in China

கடந்த 5 நாட்களில் மட்டும் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக சீன அரசு கூறியுள்ளது.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து, சீனாவில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்நாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளைத் தவிர வேறு தடுப்பூசிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கவில்லை.

அந்த வகையில் சீனாவில் 4 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 3 தடுப்பூசிகள் அவசர கால அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை இன்று 100 கோடி என்ற சாதனையை கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது உலகளவில் செலுத்தப்பட்ட அளவுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இதில் 10 கோடி தடுப்பூசிகள் கடந்த 5 நாட்களில் செலுத்தப்பட்டிருப்பதாக சீன அரசு கூறியுள்ளது.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது சீனாவில் தாமதமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் முந்தைய தடுப்பூசி முறைகேடுகளால், அங்கு தடுப்பூசி போடுவதில் மக்களிடையே தயக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஒரு மாத காலமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்திருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையான 140 கோடியில், 70 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவர் செங்க் இக்சின் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Record of vaccinating 100crore doses in China

Related posts

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயங்கர மோதல் : 30 பயணிகள் பலி – அவசர நிலை பிரகடனம்..!

Tharshi

ஐ.பி.எல். கிரிக்கெட் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் அணி..!

Tharshi

விசித்திரமான முறையில் நாக்கினை இரண்டாக பிளந்த யாழ் இளைஞன்..!

Tharshi

Leave a Comment