குறும்செய்திகள்

கேரட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!

There are so many benefits to eating carrots

கேரட்டை தினமும் சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை சம்மந்தமான பிரச்சினை குறைந்து கண்பார்வை பளிச்சென தெரியும்.

மேலும், கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது கேரட்.

அந்தவகையில், கேரட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் எவையென பார்ப்போமா..?

* கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண்களுக்கு பார்வை திறனை அளிக்கிறது.

*. கேரட்டில் உள்ள சத்துக்கள் தோலிற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது.

*. உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள கேரட் மிகவும் பயன்படுகிறது.

*. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து குடல் புண் வராமல் தடுக்கலாம்.

* நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் கேரட் சாறு பருகுவது நல்லது.

* கேரட் சாருடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.

* வயிற்றில் கற்கள், புண்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு கேரட் ஜூஸ் ஒரு சிறந்த மருந்தாகும்.

* மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.

* கேரட் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

* சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணமாக்க, கேரட்டை பச்சடி போல செய்து சாப்பிடலாம்.

* வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் ஏற்படாது.

* கேரட்டை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு, விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

There are so many benefits to eating carrots

Related posts

25 கோடி முறை பார்த்து வெற்றிநடை போடும் “எஞ்ஜாய் எஞ்சாமி” பாடல்..!

Tharshi

மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி : இளைஞன் கைது..!

Tharshi

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதிய தளர்வுகள்..!

Tharshi

Leave a Comment