குறும்செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் வைத்து வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்..!

Ajith fans Ask Valimai Update

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “வலிமை” படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் “வலிமை”. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண வந்த அஜித் ரசிகர் ஒருவர், “வலிமை” அப்டேட் என எழுதப்பட்ட பதாகையுடன் மைதானத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.

Ajith fans Ask Valimai Update

Related posts

19-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இந்திய குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் காலமானார்..!

Tharshi

ரஜினிகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

Leave a Comment