குறும்செய்திகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் உருவப்படங்களை எரித்து பொதுமக்கள் பாரிய எதிர்ப்பு போராட்டம்..!

Mass protest against burning of portraits of Viyalendran

மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது மெய்பாதுகாவலரால் துப்பாக்கிய பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்ற நிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரைணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையியில், எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை எரித்து,
பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இதனால், குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mass protest against burning of portraits of Viyalendran

Related posts

30-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

புதுக்குடியிருப்பில் காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு..!

Tharshi

தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு..!

Tharshi

Leave a Comment