குறும்செய்திகள்

ரஷ்ய பல்கலை கழகத்தில் அமெரிக்க மாணவி மர்ம மரணம்..!

Mysterious death of American student in Russia

ரஷ்ய பல்கலை கழகத்தில் படித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் கேத்தரீன் செரவ் (வயது 34). அமெரிக்காவை சேர்ந்தவரான செரவ் கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி கடந்த வியாழக்கிழமை பொலிசார் விசாரணையை தொடங்கினர். அதில், அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார். நான் கடத்தப்படவில்லை என நம்புகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.

எனினும், மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக கார் காட்டுக்குள் சென்றுள்ளது என கூறப்படுகிறது. காட்டில் உள்ள டவரில், செரவின் செல்போன் அழைப்பு சென்றது பதிவாகி உள்ளது. இதுபற்றி 40 வயதுடைய நபர் ஒருவரை விசாரணை குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கடந்த காலங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

Mysterious death of American student in Russia

Related posts

அதிவேக நெடுஞ்சாலையின் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு..!

Tharshi

அதிகளவு தண்ணீர் பருகுவதை சுட்டிக்காட்டும் 6 அறிகுறிகள் எவையெனத் தெரியுமா..!

Tharshi

உடல் எடையை குறைத்தால் நடந்ததை எண்ணி வருந்தும் நடிகை..!

Tharshi

Leave a Comment