குறும்செய்திகள்

23-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

23rd June Today Raasi Palankal

இன்று ஜூன் 23.2021

பிலவ வருடம், ஆனி 9, புதன்கிழமை, 23.6.2021,
வளர்பிறை, சதுர்த்தசி திதி நள்ளிரவு 3:02 வரை,
அதன்பின் பவுர்ணமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 10:54 வரை,
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : முகூர்த்த நாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எதிர்பாலின நட்புகளுடன் நெருக்கம் கூடும். பயம் நீங்கும்.
பரணி: பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிலும் கவனம் தேவை.
கார்த்திகை 1: மதிப்புக் குறையும் படியான செயல்களில் ஈடுபட வேண்டாம்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணி பற்றிய செயலிலும், பேச்சிலும் கவனமாக இருங்கள்.
ரோகிணி: சுபநிகழ்ச்சிகளில் நேரலை சந்திப்பில் கலந்து கொள்ள நேரலாம்.
மிருகசீரிடம் 1,2: இத்தனை காலம் குறைந்து இருந்த மரியாதை கூடும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சக பணியாளர்களிடம் இருந்த பிரச்சினை ஒன்று தீரும்.
திருவாதிரை: நெருங்கிய நண்பர்களின் உதவி உங்களுக்குத் தேவைப்படும்
புனர்பூசம் 1,2,3: நிதி நிலையில் முன்பைவிட சிறு முன்னேற்றம் தெரியும்.

கடகம்:

புனர்பூசம் 4: அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.
பூசம்: நெருங்கிய உறவினருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ஆயில்யம்: பணி பற்றிய முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும்.

சிம்மம் :

மகம்: திட்டமிட்ட விஷயத்தில் கூடுதல் முயற்சியை மேற்கொள்வீர்கள்.
பூரம்: புரிதல் ஏற்படும். வாக்குவாதங்களை விடுத்து நிம்மதி காண்பீர்கள்.
உத்திரம் 1: செலவு குறைந்து நிம்மதி உண்டாகும். பயங்கள் தீரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும்.
அஸ்தம்: சோர்வு உண்டாகலாம். முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.
சித்திரை 1,2: திருமணம் பற்றிய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: பாவ எண்ணம் மனதில் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவாதி: பூச்சிக்கடி. போன்றவை பற்றிய பயம் வேண்டாம். நட்பு வட்டம் விரியும்.
விசாகம் 1,2,3: மூத்தோரின் உடல்நல பிரச்னை சிறிய வைத்தியத்திலேயே சரியாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: மேலதிகாரியிடம் பேசும்போது உரிய பயம் இருத்தல் நல்லது.
அனுஷம்: தீய செயல் செய்யத் துாண்டும் நண்பர்களுடன் சேர வேண்டாம்.
கேட்டை: புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து சரி செய்வீர்கள்.

தனுசு:

மூலம்: தேவையற்ற வாக்குவாதம் வரலாம். மதியத்துக்குப் பிறகு நிம்மதி மீளும்.
பூராடம்: விரும்பிய துறையில் வெல்வதற்கு அல்லாட வேண்டியிருக்கும்.
உத்திராடம் 1: பயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலைப்பளு கூடும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் தாமதமாகவே நிறைவேறும்.
திருவோணம்: மனதிற்கு மகிழ்ச்சி தரும் செலவுகளாகவே செய்வீர்கள்.
அவிட்டம் 1,2: தேவையான பண உதவி இன்று கிடைக்க பெறுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சிறுசிறு கவலைகள் தோன்றும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
சதயம்: பிரச்னைகளை சமாளித்து முயன்று வெற்றி பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் உள்ள குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: நேர்மையானவர்களுக்குச் சாதகமான காலகட்டமாக உள்ளது.
உத்திரட்டாதி: குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து சண்டையைத் தவிர்ப்பீர்கள்.
ரேவதி: நிதி விஷயங்களில் தாமதம் ஏற்படுவதாக ஒரு சலிப்புத் தோன்றும்.

23rd June Today Raasi Palankal

Related posts

வாழ்க்கை துணைக்கு தவறான தொடர்பு இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா..!

Tharshi

நேற்றைய தினத்தில் நாட்டில் 171 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

Tharshi

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய எரிவாயு நிறுவனம்..!

Tharshi

Leave a Comment