குறும்செய்திகள்

அனைத்து வகையான லன்ச்ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை..!

Action to ban all types of lunch sheets

நேற்று (21) சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அனைத்து வகையான லன்ச்ஷீட்டுகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், விரைவில் உக்கக்கூடிய தன்மையுடைய லன்ச்ஷீட்களை அறிமுகப்படுத்துவதாக பல நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும், இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது உலகில் எந்தவொரு நாடும் லன்ச்ஷீட்களை பயன்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கும் அமைச்சர், லன்ச்ஷீட்டுகளை பயன்படுத்தும் ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமே எனவும் தெரிவித்தார்.

Action to ban all types of lunch sheets

Related posts

சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

31-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

இன்றைய முக்கிய செய்திகள் (07.06.2021) (காணொளி)

Tharshi

Leave a Comment