குறும்செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு சிறைத்தண்டனை : பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை..!

Imprisonment for those who do not vaccinate

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவுகளின்படி, 1,364,239 கொரோனா பாதிப்புகளையும் மற்றும் 23,749 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 7 கோடி பேருக்குத் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை அங்கு 21 லட்சம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்து அந்நாட்டுப் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளதாவது..,

தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டுக்கு பேரழிவு தரும். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர் கைது செய்யப்படுவார்கள். தடுப்பூசி போடாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் நீங்கள் இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு செல்லுங்கள்.

நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. அரசின் ஆலோசனையைப் பொருட்படுத்த மக்கள் மறுப்பது எரிச்சலூட்டுவதாக உள்ளது. கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

மேலும், வைரஸைக் கட்டுப்படுத்த நாம் மூன்று மடங்கு முயற்சிக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Imprisonment for those who do not vaccinate

Related posts

தொற்றுக்குள்ளான குழந்தைக்கு நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடையும் நிலை..!

Tharshi

ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி..!

Tharshi

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்..!

Tharshi

Leave a Comment