குறும்செய்திகள்

மும்பை மந்த்ராலயா வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் : மிரட்டல் விடுத்த நபர் கைது..!

Mumbai Mantralaya to be bombed Man arrested for making threats

மும்பை மந்த்ராலயா வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என ஈ-மெயில் வழியே மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

மராட்டியத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், மும்பை மந்த்ராலயாவில் வெடிகுண்டு வைத்து அது தகர்க்கப்படும் என ஈ-மெயில் வழியே மிரட்டல் செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதுபற்றி மும்பை பொலிசார் கூறும்போது..,

இந்த மிரட்டல்கள் பற்றி தொடக்க கட்ட விசாரணை நடந்து வருகிறது. மும்பை மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அச்சுறுத்தல்கள் போலியானவை என தெரிய வந்துள்ளது. இதனுடன் தொடர்புடைய மிரட்டல் விடுத்த நபரை புனே நகரில் உள்ள கோர்பண்டி பகுதியில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மும்பை பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறியுள்ளனர்.

Mumbai Mantralaya to be bombed Man arrested for making threats

Related posts

Bear Grylls இன் மறுபக்கம்..! (வீடியோ இணைப்பு)

Tharshi

அவுஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம்..!

Tharshi

யாழ்.சாவகச்சேரியில் இசைத்தமிழ் நுண்கலைக் கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைக்கும் செயற்றிட்டம்..!

Tharshi

Leave a Comment