குறும்செய்திகள்

நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து : ஒருவர் பலி..!

One person was killed in an accident in Nelliyadi area

நெல்லியடி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (22) இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என, நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவ் விபத்து சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

One person was killed in an accident in Nelliyadi area

Related posts

சீரற்ற காலநிலையால் அதிக மக்கள் பாதிப்பு : 16 வயது சிறுமி பலி – 15 வயது சிறுவனை காணவில்லை..!

Tharshi

செவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை : கிளம்பிய கடும் எதிர்ப்பு – திரும்ப பெறப்பட்ட உத்தரவு..!

Tharshi

வாகன உதிரிப்பாகங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு..!

Tharshi

Leave a Comment