குறும்செய்திகள்

24-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

24th June Today Raasi Palankal

இன்று ஜூன் 24.2021

பிலவ வருடம், ஆனி 10, வியாழக்கிழமை, 24.6.2021
தேய்பிறை, பவுர்ணமி திதி நள்ளிரவு 12:51 வரை,
அதன்பின் பிரதமை திதி, கேட்டை நட்சத்திரம் காலை 9:20 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : பவுர்ணமி, தட்சிணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நெருக்கமானவர்கள் உங்களுக்கு நன்மை அளிப்பார்கள்.
பரணி: பணியிடத்திலும், வீட்டிலும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டு.
கார்த்திகை 1: கணவன், மனைவி இடையே இருந்த சகஜ நிலை நீடிக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பிள்ளைகள் மூலம் வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்.
ரோகிணி: கற்பனையான காரணங்களால் மனக்கவலை உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: கல்வி சம்பந்தமான முயற்சிகளில் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: குடும்பத்திற்கான செலவு கூடும். இயல்பு நிலை மாறும்.
திருவாதிரை: சம்பந்தமே இல்லாதவர்கள் மீது திடீர் கோபம் வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: முயற்சிகளுக்கு ஏற்றபடி இன்று நற்பலன்கள் கிடைக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: யாரிடமும் தன்மையாகச் செயல்படுவது, பேசுவது நல்லது.
பூசம்: எதிர்ப்புக் காட்டியவர்களுடன் நல்லுறவு ஏற்படும். பேச்சினால் நன்மை வரும்.
ஆயில்யம்: பிள்ளைகள் மகிழ்ச்சியான செய்திகள் தருவார்கள்.

சிம்மம் :

மகம்: பணி, தொழில் சார்ந்த விஷயங்களில் சாதனை செய்வீர்கள்.
பூரம்: கலைத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
உத்திரம் 1: எதிர்பார்த்த அளவுக்கு நிதி நிலை உயர வாய்ப்புகள் குறைவு.

கன்னி:

உத்திரம் 2,3,4: மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துப் போக நேரலாம்.
அஸ்தம்: இயந்திரப் பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
சித்திரை 1,2: சோம்பலைத் தவிர்க்க வேண்டும். இளைஞர்களின் திறமை வளரும்.

துலாம்:

சித்திரை 3,4: மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். தடை விலகும்.
சுவாதி: இளமைக்காலத் தொடர்புகளைப் புதுப்பித்து மகிழ்வீர்கள்
விசாகம் 1,2,3: வெளியூரில் உள்ள உறவுகள் மூலம் நல்ல செய்தி வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: புதிய பொருட்களின் சேர்க்கை காரணமாகச் செலவு கூடும்.
அனுஷம்: நல்ல வாய்ப்பு கிடைக்கும். பக்தி உணர்வு கொள்வீர்கள்.
கேட்டை: தொழிலில் இருந்த போட்டிகள் விலகி நிம்மதி கிடைக்கும்.

தனுசு:

மூலம்: பணி சம்பந்தமான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பூராடம்: ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும்.
உத்திராடம் 1: புதிய பொருட்கள் வாங்குவதைத் தாமதிப்பது நல்லது.

மகரம் :

உத்திராடம் 2,3,4: எல்லாச் செயலிலும், பேச்சிலும் கவனம் தேவை.
திருவோணம்: ஆன்மிக விஷயங்களில் இன்று ஈடுபாடு அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: சில விஷயங்களில் திட்டமிட்டது நடக்காதிருக்கக்கூடும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பணப்பற்றாக்குறையால் கைமாற்று வாங்க வேண்டி வரும்.
சதயம்: பிறரிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். உங்களின் தனித்திறமை கூடும்.
பூரட்டாதி 1,2,3: கவலை நீங்கும். மற்றவர்களிடம் கனிவாகப் பழகுவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: வெற்றி காரணமாக மகிழ்ச்சியில் துள்ளுவீர்கள்.
உத்திரட்டாதி: இது வரை இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
ரேவதி: பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் முயற்சியைக் கூட்டுங்கள்.

24th June Today Raasi Palankal

Related posts

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி..!

Tharshi

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : நெய்மாருக்கு அணியில் இடமில்லை..!

Tharshi

விஜய் தேவரகொண்டாவுடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்..!

Tharshi

Leave a Comment