குறும்செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்…!

Controversial Vijay movie again

“மாஸ்டர்” படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 65வது படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், விஜய் பிறந்த நாளையொட்டி படத்துக்கு “பீஸ்ட்” என்ற பெயர் வைத்துள்ளதாக அறிவித்து விஜய்யின் 2 தோற்றங்களையும் வெளியிட்டுள்ளனர். இரண்டு தோற்றங்களும் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

இவற்றில் ஒரு தோற்றத்தில் விஜய் வாயில் சிகரெட் வைத்துள்ளாரா என்று வலைதளத்தில் சிலர் சந்தேகத்தை கிளப்பினர். இன்னும் சிலர் அது துப்பாக்கி தோட்டா என்று விளக்கினர். “சர்கார்” படத்தில் விஜய் சிகரெட் பிடித்தபடி நிற்கும் தோற்றம் வெளியானபோது எதிர்ப்பு கிளம்பி பின்னர் அந்த காட்சி நீக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் படத்துக்கு பீஸ்ட் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்ததையும் சிலர் விமர்சித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தை கட்சியும் இதற்கு கண்டனத்தை எழுப்பியுள்ளது.

அதாவது, “விஜய் நடிக்கும் படங்கள் தமிழில்தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தொடர்ந்து ஆங்கில பெயர்களை சூட்டி தாய்மொழியை புறக்கணிப்பது சரியா..?” என்று கண்டித்துள்ளது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் “லவ் டுடே”, “ஒன்ஸ்மோர்”, “பிரண்ட்ஸ்”, “யூத்”, “மாஸ்ட”ர் ஆகிய படங்கள் ஆங்கில பெயர்களில் வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Controversial Vijay movie again

Related posts

ஜூன் 21 பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமா.. : கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து..!

Tharshi

06-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

39 மணிநேர பிளேபேக் வழங்கும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 அறிமுகம்..!

Tharshi

Leave a Comment