குறும்செய்திகள்

முகக்கவசம் அணியத் தேவையில்லை : இங்கிலாந்தை தொடர்ந்து இத்தாலி அரசு அறிவிப்பு..!

Italian government announces no need to wear a face mask

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி நாட்டின் அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.99 கோடியை தாண்டியுள்ளது.

இந்தநிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக் கவசங்கள் அணிவதிலிருந்து பொது மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாலும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதாலும் முகக்கவசம் அணிய தேவையில்லை என அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இங்கிலாந்தை அடுத்து இத்தாலி நாடும் முகக் கவசம் அணிவதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Italian government announces no need to wear a face mask

Related posts

உளவு வேலைகளுக்கு பாகிஸ்தானிய நடிகைகள் : முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்..!

Tharshi

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!

Tharshi

இலங்கை ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவுக்கு..!

Tharshi

Leave a Comment