குறும்செய்திகள்

சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக பெற்ற குழந்தையை கொன்று வீசிய தாய்..!

Mother arrested for baby murder case

சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக, பெற்ற குழந்தையை பிறந்தவுடன் தாயே கொன்று வீசிய சம்பவம் சாந்தனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்..,

திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது.

அந்த குழந்தையை பிறந்த சில மணி நேரத்திலேயே யாரோ வீசிச் சென்றுள்ளனர். இது குறித்து சாந்தனூர் பொலிசார் வழக்குப்பதிந்து அது யாருடைய குழந்தை..? வீசிச் சென்றது யார்..? என்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு பாரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆகவே குழந்தையை கொன்று குப்பையில் வீசிச் சென்றது யார்..? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், சாந்தனூர் பகுதியில் சமீபத்தில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? யாராவது கர்ப்பமாக இருந்தார்களா? என்று பொலிசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த குழந்தை சாந்தனூர் அருகே உள்ள வேலுவிளை பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி ரேஷ்மா (வயது 21) என்பவருக்கு பிறந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை பிடித்து பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு பிறந்த குழந்தையை கொன்று குப்பையில் வீசியதை ரேஷ்மா ஒப்புக் கொண்டார். குழந்தையை கொன்று வீசியதற்கான காரணம் குறித்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.

“எனக்கும், வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சென்றுவிட நான் தீர்மானித்தேன். ஆனால் அதற்கு எனது குழந்தை இடையூறாக இருக்கும் என்று கருதினேன். இதனால் எனக்கு குழந்தை பிறந்ததும் கொன்று குப்பையில் வீசி விட்டேன்” என்றார்.

இதையடுத்து ரேஷ்மாவை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை கொலை சம்பவம் நடந்து 6 மாதத்திற்கு பிறகு தற்போது துப்பு துலக்கப்பட்டு, குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் பழகிய வாலிபருடன் செல்ல, பெற்ற குழந்தையை பிறந்தவுடன் தாயே கொன்று வீசிய சம்பவம் சாந்தனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother arrested for baby murder case

Related posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணி வீரர்களின் விவரம்..!

Tharshi

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய தப்பிக்க முயற்சித்ததில் பரிதாபமாக பலியான நபர்..!

Tharshi

“800” திரைப்படத்தின் பெஸ்ட் லுக் ரிலீஸ்..!

Tharshi

Leave a Comment