குறும்செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு : 3 பேர் பலி..!

Shooting in the United States 3 killed

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார். இதனால், மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், பொலிசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு நூலகத்துக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அந்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அப்போது அந்த மர்ம நபர் மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் அந்த மர்ம நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அவர் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதால், பொலிசார் அவரை சுட்டு வீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த அந்த நபரை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்? துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shooting in the United States 3 killed

Related posts

இலங்கையின் தேசியக் கொடி பற்றி நீங்கள் அறிந்திராதவை..!

Tharshi

அஸ்ட்ரா ஜெனேகா – ஸ்புட்னிக் லைட் 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி..!

Tharshi

மேலும் இரு வாரங்களுக்கு முடக்கத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்..!

Tharshi

Leave a Comment