குறும்செய்திகள்

யுவன் சங்கர் ராஜா கொடுத்த “வலிமை” பட அப்டேட்..!

Valimai Movie Update by Yuvan Shankar Raja

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசும்போது, அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் “வலிமை” படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் “வலிமை”. வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கடந்த பல மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் படக்குழுவினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் கிடைத்தபாடில்லை.

இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுடன் பேசும் போது, “வலிமை” படத்தின் முதல் அறிமுக பாடல் எப்போதும் போல் பிரம்மிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்பதைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் இருப்பதாகவும், படத்தின் முதல் பாடலுக்கு “கும்தா” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Valimai Movie Update by Yuvan Shankar Raja

Related posts

22-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம்..!

Tharshi

உங்கள் பயணப் பொதியில் இடமில்லையா..!! : இதைப் பாருங்கள்..

Tharshi

Leave a Comment