குறும்செய்திகள்

முல்லைத்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு..!

Young man body was found hanging in the Mullaitivu area

முல்லைத்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று (24) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த நபரின் சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து நேற்று இரவு முதல் கணவனை காணவில்லை என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Young man body was found hanging in the Mullaitivu area

Related posts

ஜேர்மனியில் முடிவுக்கு வந்தது டெலிகிராம் யுகம்..!

Tharshi

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் உடற்பயிற்சி, யோகா செய்யலாமா..!

Tharshi

ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்கும் இன்ஸ்டாகிராம்..!

Tharshi

Leave a Comment