குறும்செய்திகள்

26-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

26th June Today Raasi Palankal

இன்று ஜூன் 26.2021

பிலவ வருடம், ஆனி 12, சனிக்கிழமை, 26.6.2021
தேய்பிறை, துவிதியை திதி இரவு 9:04 வரை,
அதன்பின் திரிதியை திதி, பூராடம் நட்சத்திரம் காலை 6:49 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : பெருமாள் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: சவால்களை வென்று நிம்மதியடைவீர்கள். நன்மைகள் கூடும்.
பரணி: பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமிதம் தரும். அமைதியான நாள்.
கார்த்திகை 1: கோபத்தை குறைத்து குணத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: இங்கிதமான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள்.
ரோகிணி: உங்களிடம் உள்ள கவரும் தன்மையால் வெற்றி பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: குடும்ப நபர்களுடன் சற்று அனுசரித்து செல்ல வேண்டும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பிள்ளைகளால் ஏற்பட்ட பயம் அர்த்தமற்றது என்று புரியும்.
திருவாதிரை: மனதில் தெளிவு உண்டாகும். சிறு அலைச்சல் உண்டு.
புனர்பூசம் 1,2,3: வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: உறவினர்களால் சற்று உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படக்கூடும்.
பூசம்: சில விஷயங்களை இன்று போராடி முடிக்கவேண்டி வரும்.
ஆயில்யம்: புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உழைப்பினால் ஆதாயம் உண்டு.

சிம்மம் :

மகம்: புதிய பாதையில் செல்வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.
பூரம்: நன்மை அடைய மிகவும் முயற்சி செய்ய வேண்டிவரும்.
உத்திரம் 1: புத்துணர்ச்சி பெறுவீர்கள். உற்றவர்கள் ஓரளவு ஒத்துழைப்பர்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பல காலம் சந்திக்காத நண்பர், உறவினரை சந்தித்து மகிழ்வீர்கள்.
அஸ்தம்: வாழ்க்கைத்துணைக்கு நற்செய்தி ஒன்று தேடி வரும்.
சித்திரை 1,2: சில வேலைகளை முடிக்க சற்றுத் திணறுவீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: வீட்டில் உள்ள பொருட்கள் பழுதாகி இன்றைக்கே சரிசெய்வீர்கள்.
சுவாதி: தந்தைவழி சொத்து சம்பந்தமான முயற்சியில் ஆதாயம் உண்டு.
விசாகம் 1,2,3: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுக் கொடுங்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: சமீபத்தில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.
அனுஷம்: தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள்.
கேட்டை: திட்டமிட்ட விஷயத்தில் தைரியத்துடன் ஈடுபடலாம்.

தனுசு:

மூலம்: பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.
பூராடம்: நெருங்கியவரின் ஆசையை நிறைவேற்றி அவரின் பிரமிப்புக்கு ஆளாவீர்கள்.
உத்திராடம் 1: முயற்சித்த விஷயம் முடிவதற்குத் தாமதமாகும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: வெளிமாநிலம் சென்றவர்கள் வெற்றியுடன் திரும்பி வருவீர்கள்.
திருவோணம்: வீட்டில் ஒருவருக்குப் பழைய நண்பரால் ஆதாயம் உண்டு.
அவிட்டம் 1,2: மற்றவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாதபடி பேசுங்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் வெற்றி தாமதமாகும்.
சதயம்: நல்ல மனம் உள்ள உறவினரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: வீடு, வாகனம் வாங்கும் யோகம் சற்றுத் தள்ளிப்போகும்.

மீனம்:

பூரட்டாதி 4: பிறருக்கு உதவி செய்வீர்கள். சமூக சேவையில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: வெற்றிக்காக முயற்சியை அதிகப்படுத்தவேண்டி வரும்.
ரேவதி: எதிர்பார்த்த ஒவ்வொரு நன்மையும் தாமதித்தே வந்தடையும்.

26th June Today Raasi Palankal

Related posts

நூர்ஜஹான் மாம்பழம் : விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்..!

Tharshi

தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு : தசுன் ஷானகவிடம் விசாரணை..!

Tharshi

அதிபர் மெக்ரானை கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாதம் சிறைத் தண்டனை..!

Tharshi

Leave a Comment