குறும்செய்திகள்

27-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

27th June Today Raasi Palankal

இன்று ஜூன் 27.2021

பிலவ வருடம், ஆனி 13, ஞாயிற்றுக்கிழமை, 27.6.2021
தேய்பிறை, திரிதியை திதி இரவு 7:39 வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, திருவோணம் நட்சத்திரம் அதிகாலை 5:25 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை
பொது : முகூர்த்தநாள், சங்கடஹர சதுர்த்தி.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குடும்பத்தினரின் எதிர்கால முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
பரணி: பல காலம் கழித்துப் பழைய நண்பர் ஒருவரைச் சந்திப்பீர்கள்.
கார்த்திகை 1: வருமானம் உயரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: மனத்திருப்தி இருக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி: அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 1,2: அலவலக சவாலை எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: முன்பிருந்த பயம் நீங்கும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
திருவாதிரை: தோல்வி மனப்பான்மை வேண்டாம். முயற்சியைக் கூட்டுங்கள்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சி அதிகரிப்பதால் சிறு லாபம் ஒன்று வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: பெற்றோரின் கட்டுப்பாடும், கண்டிப்பும் எரிச்சல் தரக்கூடும்.
பூசம்: உங்கள் நல்ல குணத்தால் நன்மை ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.
ஆயில்யம்: தந்தையின் செயல் ஒன்று பெருமிதம் அளிக்கும். நன்மை அடைவீர்கள்.

சிம்மம் :

மகம்: சுப நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாமல் தடைகள் ஏற்படும்.
பூரம்: மற்றவர்கள் உங்களின் மீது பொறாமை கொள்வார்கள்.
உத்திரம் 1: சகோதரர், சகோதரிகள் உதவுவார்கள். கவலை தீரும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வாகனம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அஸ்தம்: பிறருடன் வாக்குவாதம் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
சித்திரை 1,2: பரபரப்பான நாள். உழைப்பை மட்டுமே நம்புங்கள்.

துலாம்:

சித்திரை 3,4: தொட்டது துலங்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
சுவாதி: யாரையும் சட்டென்று கத்தரிக்க வேண்டாம். பயணம் குறையும்.
விசாகம் 1,2,3: வெற்றி வாய்ப்பு சதவீதம் அதிகரிக்கும். நிம்மதியான நாள்.

விருச்சிகம்:

விசாகம் 4: நீண்டநாள் கனவு நிறைவேறுவதற்கான செயல்கள் செய்வீர்கள்.
அனுஷம்: உடல்நிலையில் ஏற்பட்ட சிரமங்களில் இருந்து மீளுவீர்கள்.
கேட்டை: இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். குடும்பத்தினரிடையே ஒற்றுமை கூடும்.

தனுசு:

மூலம்: எதிர்பாராதவரின் ஒத்துழைப்பை பெற்று மனம் மகிழ்வீர்கள்.
பூராடம்: புத்திசாலித்தனத்தால் உறவினர் மத்தியில் கவுரவம் உயரும்.
உத்திராடம் 1: அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்க வேண்டாம். உழைப்பே உதவும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சிறு மனஸ்தாபம் நீங்கும். உங்களின் பேச்சு நன்மை தரும்.
திருவோணம்: பணியாளர்களுக்கு பணவரவு தாராளமாக இருக்க வாய்ப்பில்லை.
அவிட்டம் 1,2: உங்களின் நற்செயல்கள் பிறரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாது.

கும்பம்:

அவிட்டம் 3,4: பேச்சால் சிரமத்துக்குள்ளாகக்கூடும். பிள்ளைகளுக்கு நன்மை வரும்.
சதயம்: தந்தைவழி உறவினரால் மனஅமைதி தரும் செயல்கள் நிகழும்.
பூரட்டாதி 1,2,3: உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது சந்தேகமே.

மீனம்:

பூரட்டாதி 4: பணியில் பெரிய முன்னேற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.
உத்திரட்டாதி: தாயாருக்கும், தாய்வழி உறவினருக்கும் நலம்புரிவீர்கள்.
ரேவதி: முயற்சிக்கேற்ற நன்மை வரும். தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்.

27th June Today Raasi Palankal

Related posts

சிவராத்திரி தினத்தில் புது வீட்டில் குடியேறிய நடிகர் தனுஷ்..!

Tharshi

சாவகச்சேரியில் நிறுவப்பட்டுள்ள சீன நிறுவனம் : இரு மொழிகளில் மாத்திரம் பெயர் பலகை..!

Tharshi

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம் : இம்ரான்கான் எச்சரிக்கை..!

Tharshi

Leave a Comment