குறும்செய்திகள்

3 வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய கணவரை கொலை செய்த 2 வது மனைவி..!

2nd wife murdered her husband who said he was going to remarry

உத்தர பிரதேசத்தில் 3 வது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய கணவரின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த 2 வது மனைவி கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசம் முசாபர்நகர் ஷிகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மவுலவி வகீல் அகமது (வயது 57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பெயர் ஹாஜ்ரா.

கடந்த சில நாட்களாக வகீல் அகமது மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வந்தார். இதற்கு ஹாஜ்ரா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் கூர்மையான ஆயுதத்தால் வகீல் அகமதுவின் பிறப்புறுப்பை துண்டித்தார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அதே இடத்தில் வகீல் உயிரிழந்தார். உடனடியாக ஹாஜ்ரா தனது உறவினர்களின் உதவியுடன் இறுதி சடங்குகளை செய்ய முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஹாஜ்ரா குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

2nd wife murdered her husband who said he was going to remarry

Related posts

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான சில சித்த மருத்துவ முறைகள்..!

Tharshi

22-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

மூழ்கும் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 306 இலங்கையரின் நிலைமை..!

Tharshi

Leave a Comment