குறும்செய்திகள்

28-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

28th June Today Raasi Palankal

இன்று ஜூன் 28.2021

பிலவ வருடம், ஆனி 14, திங்கட்கிழமை,
28.6.2021, தேய்பிறை, சதுர்த்தி திதி மாலை 6:40 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, அவிட்டம் நட்சத்திரம் அதிகாலை 5:17 வரை,
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொது : முகூர்த்த நாள், சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பிள்ளைகளுடன் மனஸ்தாபம் ஏற்படாமல் கவனமாக இருங்கள்.
பரணி: மன நிறைவுடன் மற்றவர்க்கு நன்மை ஒன்றைச் செய்வீர்கள்.
கார்த்திகை 1: இத்தனை நாள் உதவியவர்கள் ஒத்துழைக்காமல் விலகக்கூடும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: சாதுர்யமாய் நடந்து பிறருக்கு நன்மை ஏற்படுத்துவீர்கள்.
ரோகிணி: மற்றவருக்கு உதவி செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: நீண்டகாலத் தடைகள் ஒரு வழியாக அகலும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: வாழ்வில் சிறியதொரு மகிழ்ச்சிகரமான திருப்பம் ஏற்படும்.
திருவாதிரை: எதிரிகளை வெல்வீர்கள். எதிர்பார்ப்பு ஒன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் கவுரவத்தைக் குலைக்கும் செயலை செய்ய வேண்டாம்.

கடகம்:

புனர்பூசம் 4: ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
பூசம்: தந்தையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பின் மூலமே நன்மை வரும்.
ஆயில்யம்: வீடு களைகட்டும். ஜீரண உறுப்பில் சிறிய சிரமம் உண்டாகும்.

சிம்மம் :

மகம்: நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. சேமிப்பு கூடும்.
பூரம்: மகிழும்படியான சிறு சிறு வெற்றிகள் உண்டு. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
உத்திரம் 1: நல்லபெயர் எடுக்கும்படியான செயல் செய்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பணப் பிரச்னை ஓரளவுக்கு குறைந்து நிம்மதி வரும்.
அஸ்தம்: உறவினர்களின் உதவியால் சிரமங்களில் இருந்து மீளுவீர்கள்.
சித்திரை 1,2: புதிய விஷயம் ஒன்றைச் சாதிப்பீர்கள். உற்சாகம் கூடும்.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்காலத்திட்டம் பற்றிய சிறு ஏமாற்றம் ஒன்று ஏற்படும்.
சுவாதி: சிறு விஷயம் ஒன்றில் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
விசாகம் 1,2,3: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த விஷயம் முடியும்.

விருச்சிகம்:

விசாகம் 4: உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மனம் அமைதியுறும்.
அனுஷம்: உறவினர்களிடம் இருந்து வரும் செய்தி பரபரப்பளிக்கும்.
கேட்டை: மெனக்கெட்டு ஈடுபட்டு எதையும் செய்வதால் புகழ் கிடைக்கும்.

தனுசு:

மூலம்: வெகு காலம் எதிர்பார்த்த சம்பள உயர்வு சற்றுத் தள்ளிப்போகும்.
பூராடம்: அரசாங்கத்தால் சிறு நன்மை ஒன்றை அடைவீர்கள்.
உத்திராடம் 1: வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: பிரச்னை ஒன்றை நல்லவர் உதவியுடன் சரி செய்வீர்கள்.
திருவோணம்: மனம் அமைதியுறும். பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு இருக்காது.
அவிட்டம் 1,2: தாமதமான விஷயங்கள் இன்று நல்லபடியாக முடியும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை மேம்படக் காண்பீர்கள்.
சதயம்: நேற்றிருந்ததைவிட உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்
பூரட்டாதி 1,2,3: பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சுபநிகழ்ச்சி பற்றிய செய்தி வரும்.

மீனம்:

பூரட்டாதி 4: பெரிய முயற்சி ஒன்றில் வெற்றி அடைவதற்கான அறிகுறி தென்படும்
உத்திரட்டாதி: சிறு செலவு ஒன்று உண்டாகும். மனதில் நிறைவு வரும்.
ரேவதி: இடைவிடாத உழைப்பும், முயற்சியும் புதிய வெற்றி வாய்ப்பு தரும்.

28th June Today Raasi Palankal

Related posts

சர்ச்சை இயக்குனரின் முதல் லெஸ்பியன் கிரைம் : மிரட்டும் போஸ்டர்..! (படங்கள் இணைப்பு)

Tharshi

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்கு செல்வோருக்கான அறிவித்தல்..!

Tharshi

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன்..!

Tharshi

Leave a Comment