குறும்செய்திகள்

17-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

17th July Today Raasi Palankal

இன்று ஜூலை 17.2021

பிலவ வருடம், ஆடி 1, சனிக்கிழமை, 17.7.2021
வளர்பிறை, அஷ்டமி திதி நள்ளிரவு 12:31 வரை,
அதன்பின் நவமி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 11:59 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : தட்சிணாயன புண்ணிய காலம்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: குடும்பத்தில் அமைதி நிலவும். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.
பரணி: தாய்வழி உறவினால் நன்மை கிடைக்கும். உடல்நிலை சீராகும்.
கார்த்திகை 1: பணியிலிருந்த அழுத்தங்கள் படிப்படியாக விலகும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: அதிர்ஷ்டத்தால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
ரோகிணி: பணத்தேவை பூர்த்தியாகும். கவலை தீர்ந்து நிம்மதி பிறக்கும்.
மிருகசீரிடம் 1,2: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: பணியில் வளர்ச்சி ஏற்படும். பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.
திருவாதிரை: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சொத்து பிரச்னை தீரும்.
புனர்பூசம்1,2,3: உறவினரால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சுபசெய்தி வந்து சேரும்.

கடகம்:

புனர்பூசம் 4: புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
பூசம்: குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்ச்சி காண்பீர்கள்.
ஆயில்யம்: குடும்பத்தினரின் ஆதரவும் கண்டு மனம் நெகிழ்வீர்கள்.

சிம்மம் :

மகம்: புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
பூரம்: கவலை தீரும். எடுத்த முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம்1: தொழில், வியாபாரத்தில் வழக்கத்தை விட லாபம் அதிகரிக்கும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: அலுவலகப் பணி ஒன்றை முடித்து அதிகாரியிடம் பாராட்டுப் பெறுவீர்கள்.
அஸ்தம்: நீண்ட நாள் விரும்பிய ஆடம்பர பொருள் ஒன்றை வாங்குவீர்கள்.
சித்திரை 1,2: குடும்பத்தினர் மகிழும்படியான செயல் ஒன்றைச் செய்வீர்கள்.

துலாம்:

சித்திரை 3,4: தாமதப்பட்ட விஷயம் ஒன்று எளிதாக நிறைவேறும்.
சுவாதி: பெற்றோரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவுவர்.
விசாகம் 1,2,3: பிரச்னை ஒன்றை நல்ல முறையில் பேசித் தீர்ப்பீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: அலுவலகத்தில் பணிச்சுமை படிப்படியாக குறையும். ஓய்வு எடுப்பீர்கள்.
அனுஷம்: பணி முயற்சியில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல்நிலை சீராகும்.
கேட்டை: பழைய பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு கிடைக்கும். மனதில் நிம்மதி நிலைக்கும்.

தனுசு:

மூலம்: மனதில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீ்ர்கள்.
பூராடம்: இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு வளர்ச்சி காண்பார்கள்.
உத்திராடம்1: முன்னேற்றத்துக்கான வாய்ப்பு கிடைக்கும். மனதில் சந்தோஷ சாரல் அடிக்கும்.

மகரம் :

உத்திராடம்2,3,4: எதிர்காலம் பற்றிய கவலை தீரும். சுபசெய்திகள் வந்து சேரும்.
திருவோணம்: நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காண்பீர்கள்.
அவிட்டம்1,2: சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். திடீர் செலவு ஏற்படும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: மற்றவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். நிதானமாக பேசுங்கள்.
சதயம்: கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. தியானம், கடவுள் வழிபாடு நலம் தரும்.
பூரட்டாதி1,2,3: ஆதங்கம், எரிச்சல் படாமல் பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.

மீனம்:

பூரட்டாதி 4: எந்த விஷயத்திலும் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
உத்திரட்டாதி: அலட்சியமாக வேண்டாம். அக்கறையுடன் பணிபுரிவது அவசியம்.
ரேவதி: முயற்சிக்கான பலன் கிடைக்காமல் போகாது. பரபரப்பான நாள்.

17th July Today Raasi Palankal

Related posts

லிஃப்ட் விபத்தில் 30 வயது நபர் உயிரிழப்பு..!

Tharshi

குழந்தைகள் விரல் சூப்பும்போது விரல் எலும்புகளிலும் பாதிக்கும் : ஆய்வில் தகவல்..!

Tharshi

லிங்குசாமியின் படத்தில் வில்லனாகும் மாதவன்..!

Tharshi

Leave a Comment