குறும்செய்திகள்

இறால் மஞ்சூரியன் ரெசிபி செய்வது எப்படி என்று தெரியுமா..!

Prawn Manchurian Recipe In Tamil

இறால் மஞ்சூரியனை சாதம், நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

அந்தவகையில், இன்று இந்த இறால் மஞ்சூரியன் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாமா…?

தேவையான பொருட்கள் :

இறால் – கால் கிலோ
சில்லி பிளேக்ஸ் – சிறிதளவு
வெங்காயத்தாள் – தேவைக்கு
பெ.வெங்காயம் – 1 (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
பூண்டு – 5 பல்
மிளகாய் சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* இறாலை கழுவி சுத்தம் செய்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை போட்டு பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

* பின்னர் வெங்காயத்தை கொட்டி தனியாக வதக்கவும்.

* அடுத்து பூண்டு சேர்த்து வதக்கவும்.

* அதனுடன் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சில்லி பிளேக்ஸ், உப்பு போன்றவற்றை கலந்து பச்சை வாசம் நீங்கும்வரை வதக்கவும்.

* அதன் பிறகு குடைமிளகாய், வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கி, இறாலை கொட்டி கிளறி இறக்கவும்.

* ருசியான இறால் மஞ்சூரியன் ரெடி… 🙂

Prawn Manchurian Recipe In Tamil

Related posts

கர்ப்பிணித் தாயின் கொவிட் தொற்றால் வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்த 5 மாத சிசு..!

Tharshi

கொவிட்டில் இருந்து மீண்டவர்களுக்கு உருவாகும் நரம்பியல் நோய் அபாயம்..!

Tharshi

2வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 118 ரன்கள் பெற்ற இங்கிலாந்து..!

Tharshi

Leave a Comment