குறும்செய்திகள்

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம் : நடிகர் விஜய் மேல் முறையீடு..!

Rolls Royce car entry tax case Vijay appeals

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..!

நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு, திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Rolls Royce car entry tax case Vijay appeals

Related posts

13-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

“பதான்” திரைப்பட சர்ச்சை : மீண்டும் கத்தரிக்க சென்சார் போர்டு முடிவு..!

Tharshi

மனைவியின் சொத்தை கணவன் சொந்தம் கொண்டாட முடியுமா..!

Tharshi

Leave a Comment