குறும்செய்திகள்

ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிக அக்கவுண்ட்களை முடக்கிய வாட்ஸ்அப்..!

WhatsApp Banned Over 2 Million Accounts

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிக அக்கவுண்ட்களை முடக்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் மே 15 முதல் ஜூன் 15, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 20 லட்சம் அக்கவுண்ட்களை முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. தவறு நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கும் முயற்சியாக இவ்வாறு செய்யப்பட்டது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் படி வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்து 11 ஆயிரம் அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “உலகளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் மட்டும் 25 சதவீத அக்கவுண்ட்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. தேவையற்ற அல்லது தவறு நடக்க காரணமாக அமையும் குறுந்தகவல்கள் பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கம்,” என அந்நிறுவனம் தெரிவித்தது.

விதிகளை மீறி அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குறுந்தகவல்களை அனுப்பும் அக்கவுண்ட்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

WhatsApp Banned Over 2 Million Accounts

Related posts

ட்விட்டர் தளத்தில் மீண்டும் புளூ டிக் அம்சம்..!

Tharshi

கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ள சாம்சங் நிறுவனம்..!

Tharshi

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம்..!

Tharshi

Leave a Comment