குறும்செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவோம் : தினேஷ் குணவர்தன உறுதி..!

Dinesh Gunawardena confirmed We amend Prevention of Terrorism Act

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள ஒரு சில ஷரத்துக்களை திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வுகளை செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை துணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

இலங்கையில் செயற்படுகின்ற சிவில் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சந்தித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நடந்த இந்த சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் பற்றி சர்வதேச நாடுகளுக்கு முன்பாக பலரும் பலவித விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும், இலங்கையின் மனித உரிமை விவகாரம் மற்றும் இலங்கை நல்லிணக்க செயற்பாடுகள் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அந்த விவகாரங்கள் தொடர்பில் நேர்பட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Dinesh Gunawardena confirmed We amend Prevention of Terrorism Act

Related posts

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தில் கேன் வில்லியம்சன்..!

Tharshi

23-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு..!

Tharshi

Leave a Comment