குறும்செய்திகள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அரசாங்கத்தின் உயர் பதவி..!

Former MP Duminda Silva holds top government post

அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு உயர் பதவியொன்றை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வாவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி கடித உறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Former MP Duminda Silva holds top government post

Related posts

The Latest Hot E-Commerce Idea in China: The Bargain Bin

Tharshi

ஏப்ரல் 21 தாக்குதல் : மைத்திரி உள்ளிட்டோரின் குற்றம் நிரூபம்..!

Tharshi

கொழும்பில் சீனாபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கல் தொடர்பான விபரம் எஸ்.எம்.எஸ்.சேவையில்..!

Tharshi

Leave a Comment