குறும்செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் : டோக்கியோவில் மாயம்..!

Ugandan athlete who went to the Olympics is missing in Tokyo

ஜப்பானில் காணாமல் போன உகாண்டா நாட்டு ஒலிம்பிக் பளு தூக்கும் வீரரை பொலிசார் தேடி வருகின்றனர்.

20 வயதான உகாண்டா பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார். மேற்கு ஜப்பானின் ஒசாகாவில் உள்ள இசுமிசானோ என்ற நகரத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை நேற்று நள்ளிரவு முதல் காணவில்லை.

கொரோனா பரிசோதனைக்காக வீரர்கள் அழைக்கப்பட்ட போது அவர் காணாமல் போனது தெரியவந்தது.

உகாண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதால், ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக ஒரு கடிதம் அவர் எழுதி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அருகிலுள்ள ரெயில் நிலையம் அவர் மத்திய ஜப்பானில் உள்ள நகோயாவுக்கு புல்லட் ரெயிலில் ஏற டிக்கெட் வாங்கியதை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செகிடோலெக்கோ தகுதி பெறவில்லை, அடுத்த செவ்வாயன்று உகாண்டாவுக்கு திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார்.

Ugandan athlete who went to the Olympics is missing in Tokyo

Related posts

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. : கணவன் மனைவி கலாட்டா ஜோக்ஸ்..!

Tharshi

12.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

மாரத்தான் போட்டியின் போது திடீரென தாக்கிய இயற்கை சீற்றம் : சீனாவில் 21 பேர் பலி..!

Tharshi

Leave a Comment