குறும்செய்திகள்

19-07-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

19th July Today Raasi Palankal

இன்று ஜூலை 19.2021

பிலவ வருடம், ஆடி 3, திங்கட்கிழமை, 19.7.2021,
வளர்பிறை, தசமி திதி இரவு 7:49 வரை,
அதன்பின் ஏகாதசி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 8:53 வரை,
அதன்பின் அனுஷம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ரேவதி, அசுவினி
பொது : சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பிறரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. பேச்சைக் குறைக்கவும்.
பரணி: தர்மம் செய்வதிலும் தெய்வப் பணிகளிலும் பங்கேற்று மகிழ்வீர்கள்.
கார்த்திகை 1: பிள்ளைகள், வாழ்க்கைத்துணைவரால் நன்மை காண்பீ்ர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: புதிய சாதனை செய்வதற்கான சந்தர்ப்பம் கூடி வரும்.
ரோகிணி: உறவினர் ஒத்துழைப்பார்கள். மனத்தில் தன்னம்பிக்கை கூடும்.
மிருகசீரிடம் 1,2: முயற்சி பலிக்கும். குடும்பம் சீ்ர்பெறும். உழைப்பு வீண்போகாது.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: முக்கிய பிரச்னைகளை விழிப்புடன் அணுகுவது அவசியம்.
திருவாதிரை: சுபச்செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீண்ட நாள் கவலைகள் நீங்கும்.
புனர்பூசம்: 1,2,3: குடும்ப விஷயங்களில் அக்கறை தேவை. பேச்சால் நன்மை வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: பேச்சில் அதிக கவனம் தேவை. லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
பூசம்: எடுக்கும் முயற்சிகளில் எப்பாடு பட்டாவது வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: உடன் பிறப்பால் ஆதாயம் கூடும். வீண் கவலைகள் மறையும்.

சிம்மம் :

மகம்: தாயால் அனுகூலம் உண்டு. புதிய வீடு, வாகனம் சேர்க்கை உண்டாகும்.
பூரம்: குழந்தைகளின் செயல்கள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும்.
உத்திரம்1: சொத்து, பத்திரம் விவகாரங்களில் கவனம் தேவை.

கன்னி:

உத்திரம் 2,3,4: கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். பதற்றம் வேண்டாம்.
அஸ்தம்: கணவன், மனைவிக்குள் அன்பு மேம்படும். பணிமாற்றம் ஏற்படலாம்.
சித்திரை 1,2: புதிய ஒப்பந்தங்களால் வருமானம் கூடும். நண்பர்கள் உதவுவர்.

துலாம்:

சித்திரை 3,4: தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார்.
சுவாதி: பணி விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
விசாகம் 1,2,3: வீட்டிலும் பணியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்:

விசாகம்4: மன பலத்தால் எதையும் சாதிக்கும் வலிமை அதிகரிக்கும்
அனுஷம்: கஷ்டங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
கேட்டை: இந்த நாள் இனிய நாள். உற்சாகமுடன் செயல்பட்டு மகிழ்ச்சி காண்பீர்கள்.

தனுசு:

மூலம்: வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
பூராடம்: ஆரோக்கியம் மேம்படும். மனதிலும் உற்சாகம் மேலோங்கும்.
உத்திராடம்1: சீரிய அணுகுமுறையால் கடினமான பணியைக் கூட எளிதாக முடிப்பீர்கள்.

மகரம் :

உத்திராடம்2,3,4: உற்சாகமுடன் செயல்படுவீர்கள். சில முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும்.
திருவோணம்: வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடு வந்து விலகும். பொறுமை தேவை.
அவிட்டம்1,2: நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.

கும்பம்:

அவிட்டம் 3,4: சிக்கலான பிரச்னைகளை பொறுமையுடன் கையாள்வது அவசியம்.
சதயம்: பிரச்னை வந்தாலும் உடல்நிலை குறித்த கவலை வேண்டாம். செலவு கூடும்.
பூரட்டாதி1,2,3: மருத்துவச் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: சற்றே அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன் உண்டாகும்.
உத்திரட்டாதி: எதில் ஈடுபட்டாலும் உற்சாகம் குறையாது. சுபச்செலவு அதிகரிக்கும்.
ரேவதி: மனதில் பட்டதை வெளிப்படையாக பேச வேண்டாம். நிதானம் அவசியம்.

19th July Today Raasi Palankal

Related posts

தொற்றுக்குள்ளான குழந்தைக்கு நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடையும் நிலை..!

Tharshi

கொரோனா கால நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சாலட் செய்முறை..!

Tharshi

கோடையில் உணவை குறைத்து இதை அதிகம் குடித்து பாருங்க..!

Tharshi

Leave a Comment