குறும்செய்திகள்

06-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

6th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 06.2021

பிலவ வருடம், ஆடி 21, வெள்ளிக்கிழமை, 6.8.2021
தேய்பிறை, திரயோதசி திதி மாலை 6:49 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 7:38 வரை,
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: எதிரிகள் அடங்குவர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி: அதிர்ஷ்டமான, அமைதியான நாள். எண்ணம் ஒன்று நிறைவேறும்.
கார்த்திகை 1: பகைவர் மனம் மாறி முன்வந்து நட்பாக வாய்ப்புண்டு.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: எடுத்த முயற்சி வெற்றி பெறும். பணிவாகப் பேசி நன்மையடைவீர்கள்.
ரோகிணி: அலுவலக முன்னேற்றம் பற்றிய கவலை ஒன்று நீங்கும்
மிருகசீரிடம் 1,2: அரசாங்கத்தின் உதவி தாமதத்துக்குப்பின் கிடைக்கும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: புதிதாக அறிமுகமான நண்பர்கள் உதவி கேட்டு வருவர்.
திருவாதிரை: யாரிடமும் பிடிவாதமின்றி வளைந்து கொடுத்துப் போவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: சிரமம் ஒன்றிலிருந்து விடுபட்டு மன நிம்மதியடைவீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: நட்பை மதிக்காதவர்களை நினைத்து வருந்த வேண்டாம்.
பூசம்: நம்பிக்கை இழக்காமல் சவாலான முயற்சிகளைத் தொடர்வீர்கள்.
ஆயில்யம்: நீண்ட நாள் கவலை தீர்வது குறித்து மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம் :

மகம்: கோபிக்க வேண்டிய நேரகளில் அமைதி காத்து வெல்வீர்கள்.
பூரம்: மன நிம்மதி மீளும். விட்டுப்போன தொடர்புகளைப் புதுப்பிப்பீர்கள்.
உத்திரம்,1: மகளின்/ மகனின் போக்கு மாறி திடீர் மகிழ்ச்சி அளிக்கும்.

கன்னி:

உத்திரம்,2,3,4: எதையும் அதிக முயற்சிக்குப்பின்தான் முடிக்க இயலும்
அஸ்தம்: உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை என வருந்தாதீர்கள்.
சித்திரை, 1,2: தன்னம்பிக்கை துளிர்விடும். தகவல் ஒன்று மகிழ்ச்சி தரும்.

துலாம்:

சித்திரை, 3,4: புது முயற்சி சற்றுத் தள்ளிப்போனால் அது நன்மைக்கே.
சுவாதி: தாயாருக்கு நன்மை ஏற்படும். பிடிவாதத்தை விட வேண்டும்.
விசாகம் 1,2,3: மிகவும் வேண்டியவர்களின் வாழ்வு மேம்படுவதைக் கண்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம்,4: குடும்பத்தினரின் செயலால் குடும்ப கௌரவம் உயரும்.
அனுஷம்: வெளிநாட்டில் உள்ளவர்கள் பெற்றோரைச் சந்திப்பீர்கள்.
கேட்டை: நேற்றைய மன பாரம் விலகி நிம்மதி உண்டாகி செயல்களில் தெளிவு வரும்.

தனுசு:

மூலம்: எந்தச் செயல்பாட்டிலும் பதற்றமோ அவசரமோ கூடாது.
பூராடம்: புது முயற்சி வெல்லும். பழிகளைத் துடைத்தெறிந்து நிமிர்வீர்கள். எண்ணம் ஈடேறும்.
உத்திராடம்,1: தவறிப்போயும் தீயவர் நட்பு வராதபடி கவனமாக இருங்கள்.

மகரம் :

உத்திராடம்,2,3,4: பேசும் வார்த்தைகளால் நன்மையும் லாபமும் கூடும்.
திருவோணம்: லோன் போட்டிருந்தால் எளிதாகக் கிடைக்க நண்பர் உதவுவர்.
அவிட்டம்,1,2: உடல் உழைப்பை நம்புபவர்களுக்கு நன்மை பெருகும்.

கும்பம்:

அவிட்டம், 3,4: பலவித நிகழ்வுகள் ஒரே நாளில் நிகழ்வதால் மகிழ்வீர்கள்.
சதயம்: பெரிய திட்டம் ஒன்றைக் கையில் எடுத்துச் செய்ய ஆரம்பிப்பீர்கள்.
பூரட்டாதி,1,2,3: வெளிநாட்டிலிருந்து இனிக்கும் செய்தி வந்து மகிழ்விக்கும்.

மீனம்:

பூரட்டாதி, 4: எது செய்தாலும் அதை மிக நேர்மையாகச் செய்யுங்கள்.
உத்திரட்டாதி: நினைத்தது நடைபெறுவதற்கான அடையாளம் தெரியும்.
ரேவதி: விலை உயர்ந்த அல்லது வாசனைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

6th August Today Raasi Palankal

Related posts

டிக் டாக் செயலி தடை விவகாரம் : டிரம்பின் உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!

Tharshi

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகளால் ஏற்பட்ட முதல் மரணம்..!

Tharshi

கடன் சுமையில் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கித் தவிக்கும் முன்னணி நடிகர்..!

Tharshi

Leave a Comment