குறும்செய்திகள்

இந்தோனேசியாவில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 35,764 பேர் பாதிப்பு..!

Corona virus on the rise in Indonesia

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் 35,764 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா 14-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் 35,764 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35.68 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,739 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது.

கொரோனாவில் இருந்து 29.47 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், 5.18 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Corona virus on the rise in Indonesia

Related posts

மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது : ரணில் விக்கிரமசிங்க..!

Tharshi

தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞன் தற்கொலை..!

Tharshi

தீயில் எரியும் சரக்குக் கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில்…!

Tharshi

Leave a Comment