ஹிசாலினி போன்ற சிறுமிகள் உருவாவதற்கு வறுமையே காரணம் என, நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறினார்.
மேலும், கொழும்பில் பணிபுரிந்த இளைஞர்கள் கொவிட் தொற்றுக் காரணமாக மலையகம் திரும்பி வேலையில்லாமல் உள்ளதால் அவர்களது குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை முறையாக அரசாங்கம் வழங்க நடவடிக்கையெடுத்தால் இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.