குறும்செய்திகள்

07-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

7th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 07.2021

பிலவ வருடம், ஆடி 22, சனிக்கிழமை, 7.8.2021,
தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:38 வரை,
அதன்பின் அமாவாசை திதி, புனர்பூசம் நட்சத்திரம் காலை 9:20 வரை,
அதன்பின் பூசம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் :பூராடம்
பொது : பெருமாள், அனுமன், சனீஸ்வரர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: முன்பு சுலபமாக நிறைவேறியவற்றிற்கும் முயற்சி தேவை.
பரணி: அன்னை பற்றிய கவலை வேண்டாம். வாகனம் வாங்குவீர்கள்.
கார்த்திகை 1: செலவு ஒன்று ஏற்படும். அதனால் நன்மை வரும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: உழைப்பால் நன்மை வரும். நல்லவர் ஆலோசனை கிடைக்கும்.
ரோகிணி: நல்ல செய்தி பெறுவீர்கள். வெற்றி உண்டு. பயம் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: நடவடிக்கைகளில் கவனம் வைத்தால் பழிச்சொல் வராது.

மிதுனம் :

மிருகசீரிடம், 3,4: எதிர்ப்பவர்களைத் தன்வசப்படுத்தும் திறமை வரும்.
திருவாதிரை: நேர்மையான செயல்பாட்டினால் மன நிம்மதி பெறுவீர்கள்.
புனர்பூசம்: 1,2,3: குடும்பத்தில் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை வரும்.

கடகம்:

புனர்பூசம்,4: சிறு பரிசுகள், அன்பளிப்பு கிடைக்கும். கவலை மறக்கும்.
பூசம்: முன்பிருந்ததைக்காட்டிலும் பணியில் வேலைப்பளு குறையும்.
ஆயில்யம்: முயற்சியின் காரணமாகப் பணவரவு சற்றே அதிகரிக்கும்.

சிம்மம் :

மகம் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த குடும்பங்கள் சேரும்.
பூரம்: புதிய வேலை தேடியவர்களுக்கு வாய்ப்பு கண்ணில் படும்
உத்திரம்,1: பிள்ளைகளின் கல்வி/ பணி பற்றிய கவலைகள் தீரும்.

கன்னி:

உத்திரம்,2,3,4: : நிம்மதியான நாள். நெருங்கிய உறவினரிடமிருந்து செய்தி வரும்.
அஸ்தம்: நீங்கள் நினைத்துப் பாராதவர்கள் உங்கள் உதவியை நாடுவர்.
சித்திரை, 1,2: நண்பர்கள், உறவினர்களிடையே இருந்த பகை உணர்ச்சி மாறும்.

துலாம்:

சித்திரை, 3,4: சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களால் சிறு ஆதாயம் உண்டு.
சுவாதி: சமீபத்தில் வாங்கிய பொருள் அல்லது பங்கின் பண மதிப்பு உயரும்.
விசாகம் 1,2,3: யாரைப் பற்றியாவது வம்பு பேசினால் இக்கட்டு வரும்.

விருச்சிகம்:

விசாகம்,4: பணவரவுகள் முன்பின்னாக இருந்தாலும் செலவு கட்டுக்குள் இருக்கும்.
அனுஷம்: துன்பங்கள் தீரும். தொடர்புவிட்டுப்போன உறவினர் வருவார்.
கேட்டை: பொறாமைக்காரர்களால் ஏற்பட்ட பிரச்னை தீர்ந்து போகும்.

தனுசு:

மூலம்: நேற்றைய பிரச்னை முழுவதுமாய்த் தீர்ந்து நிம்மதி வரும்.
பூராடம்: யாரிடமும் பகை வேண்டாம். சிறு இடரைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
உத்திராடம்,1: பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பற்றிய பயம் தீரும்.

மகரம் :

உத்திராடம்,2,3,4: திறமைகளை வெளிப்படுத்த முடியாதபடி இருந்த தடை நீங்கும்
திருவோணம்: சுப நிகழ்ச்சி நல்லபடி நடப்பதற்கான கடும்முயற்சியில் வெல்வீர்கள்.
அவிட்டம்,1,2: முன்னேற்றத்தில் இருந்து வந்த தடை ஒன்று விலகும் நாள்.

கும்பம்:

அவிட்டம், 3,4: குழந்தைகள் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியில் ஆதரவு அதிகரிக்கும்.
சதயம்: கடனைத் திருப்பி தருவீர்கள்.
பூரட்டாதி,1,2,3: பழைய சிக்கல் ஒன்று தீரும். ஆடம்பரச் செலவுகள் கூடாது.

மீனம்:

பூரட்டாதி, 4: இனிமையான நபர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழியும்.
உத்திரட்டாதி: முயற்சிக்கு நல்ல பலனும், விருதுகளும், பரிசுகளும் கிடைக்கும்.
ரேவதி:விரும்பிய விஷயம் ஒன்றை முடிப்பீர்கள். நல்லவர் நட்பு உண்டு.

7th August Today Raasi Palankal

Related posts

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை கைவிட்டது அவுஸ்திரேலியா..!

Tharshi

எதிரிகள் சுற்றி வளைப்பு : போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் தற்கொலை..!

Tharshi

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் 2 காதலர்கள் : நள்ளிரவில் இளம்பெண் கொலை..!

Tharshi

Leave a Comment