குறும்செய்திகள்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,808 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Corona affected 31808 people in the UK in the last 24 hours

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,808 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

மேலும், இங்கிலாந்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46 லட்சத்தை நெருங்குகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்..,

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19 ஆம் திகதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31,808 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதேபோல், 92 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,178 ஆக உள்ளது. மேலும் 12.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Corona affected 31808 people in the UK in the last 24 hours

Related posts

21-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தேசிய சபைக்கான நியமனங்களை அறிவித்த சபாநாயகர்..!

Tharshi

கட்டணம் அறவிடவுள்ள ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம்..!

Tharshi

Leave a Comment