குறும்செய்திகள்

08-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

8th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 08.2021

பிலவ வருடம், ஆடி 23, ஞாயிற்றுக்கிழமை, 8.8.2021
வளர்பிறை, அமாவாசை திதி இரவு 7:56 வரை,
அதன்பின் பிரதமைதிதி, பூசம் நட்சத்திரம் காலை 10:32 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை.
ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை.
குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நேற்றிருந்த கவலைகள் முழுக்கக் காணாமல் போகும்.
பரணி: திடீரென்று நினைத்துப்பார்க்காத தொகை ஒன்று வரும்
கார்த்திகை 1: மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் நீங்கி நிம்மதி மீளும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்பதால் அருமையான நாள்.
ரோகிணி: பழைய பகைவர்கள் கண்காணாமல் போவார்கள்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத விரயத்தால் ஏற்பட்ட பண நெருக்கடி தீரும்.

மிதுனம் :

மிருகசீரிடம், 3,4: யார் வம்பிலும் தலையிடாமல் இருந்தால் பிரச்னை இருக்காது
திருவாதிரை: ஒரு பயணம் மேற்கொள்வீர்கள். சூழ்நிலை மேம்படும்.
புனர்பூசம்: 1,2,3: பண விஷயத்தில் இருந்த கவலை நீங்கும்.

கடகம்:

புனர்பூசம்,4: ஆரோக்யம் பயமுறுத்தினாலும் விரைவில் சரியாகும்
பூசம்: செலவைச் சுலபமாகச் சமாளிப்பீர்கள். பணி நிலை உயரும்.
ஆயில்யம்: பலவித குணங்களை மாற்றி மாற்றி வெளிப்படுத்துவீர்கள்.

சிம்மம் :

மகம்: சுத்தமான, ஆரோக்யமான உணவை நேரம் தவறாமல் சாப்பிடுங்கள்
பூரம்: இளம் வயதினருக்குத் திருமணம் கூடி வரும். குழந்தை வாய்ப்பு வரும்.
உத்திரம்,1: கணவருடன்/ மனைவியுடன் வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும்.

கன்னி:

உத்திரம்,2,3,4: புத்திசாலித்தனமான செயல் ஒன்றைச் செய்து அசத்துவீர்கள்.
அஸ்தம்: புதிய சூழலில் நுழைய வேண்டியிருக்கும். எதையும் சமாளிப்பீர்கள்.
சித்திரை, 1,2: முயற்சி சற்றுத் தள்ளிப்போகும். குழந்தைகளுக்கு வாய்ப்பு வரும்.

துலாம்:

சித்திரை, 3,4: நன்மை செய்யும் நண்பர் அறிமுகமாவார். பணிவு கூடும்.
சுவாதி: குழந்தைகளை அரவணைத்து மகிழ்ச்சி அளிப்பீர்கள்.
விசாகம் 1,2,3: வெளியூர் செல்லத் திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்:

விசாகம்,4: திட்டம் ஒன்று பல கால முயற்சியால் வெற்றியடையும்.
அனுஷம்: நண்பின் சந்திப்பு உண்டு. மனைவி/ கணவருக்கு முன்னேற்றம் வரும்.
கேட்டை: பல காலம் கழித்து மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

தனுசு:

மூலம்: சகோதர சகோதரிகள் / நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
பூராடம்: பாராட்டு அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பு கூடும்.
உத்திராடம்,1: முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் தவிர்த்து விடுங்கள்.

மகரம் :

உத்திராடம்,2,3,4: சிறு தொல்லை உண்டு. அலுவலகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் குறையலாம்.
திருவோணம்: கணவர்/ மனைவி வீட்டு உறவினருடன் நல்லுறவு உண்டு.
அவிட்டம்,1,2: தாயாருக்கு நன்மை ஏற்படும். வாழ்வில் உயர்வீர்கள்.

கும்பம்:

அவிட்டம், 3,4:குடும்பத்தில் சிறு விவாதம் வந்து பிறகு அமைதி மீளும்.
சதயம்: நல்ல காரணத்துக்குக் குடும்பத்iதைப் பிரிந்து செல்ல வேண்டி வரலாம்.
பூரட்டாதி,1,2,3: உங்களின் தலைமை குணத்தால் நல்ல விஷயம் நடத்துவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி, 4: உங்கள் உழைப்பிற்கான பாராட்டைப் பிறர் பெற்ற நிலை மாறும்
உத்திரட்டாதி: பரபரப்பு நீங்கும். பேச்சினால் நன்மை வரும்.
ரேவதி: புதியவர்களிடம் பழகும்போது கவனமாக இருங்கள்.

8th August Today Raasi Palankal

Related posts

தெலுங்கு படத்தில் வில்லனாக மிரட்டும் விஜய்சேதுபதி..!

Tharshi

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்..!

Tharshi

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 418 பேர்  கைது..!

Tharshi

Leave a Comment