குறும்செய்திகள்

10-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

10th August Today Raasi Palankal

இன்று ஆகஸ்ட் 10.2021

பிலவ வருடம், ஆடி 24, செவ்வாய்க்கிழமை, 10.8.2021,
வளர்பிறை, பிரதமைதிதி இரவு 7:44 வரை,
அதன்பின் துவிதியை திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 11:12 வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : சிவன் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வளர்ச்சி மேலோங்கும். உடல் அசதி அதிகரிக்கக்கூடும்.
பரணி: மனதில் உற்சாகம் அதிகரித்து அது செயல்களில் வெளிப்படும்.
கார்த்திகை 1: உற்றவர்களுடன் பகை வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: தகவல் தொடர்பு ஆக்கம் தரும். செலவுகள் குறைந்து நிம்மதி தரும்.
ரோகிணி: உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஊதியம் உண்டு.
மிருகசீரிடம் 1,2: அறிவாற்றல் அதிகரிப்பதால் பயன் பெறுவீர்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம், 3,4: பணியாளர்களுக்கு மேலதிகாரி கருணை காட்டுவார்.
திருவாதிரை: தகவல் ஒன்று வந்து சந்தோஷத் திகைப்படையச் செய்யும்.
புனர்பூசம்: 1,2,3: சுற்றுப்புறம் உள்ளவர்களுக்கு உதவி செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.

கடகம்:

புனர்பூசம்,4: உற்சாகமடைவீர்கள். .விட்டுக்கொடுத்து வெற்றி பெறுவீர்கள்
பூசம்: வருத்தம் நீங்கும். வெற்றி வரும். விரைந்து செயல்படுவீர்கள்.
ஆயில்யம்: பெரிய அளவிலான மாற்றம் பற்றிய சிந்தனை இப்போதைக்கு வேண்டாம்.

சிம்மம் :

மகம்: மகன்/ மகள் முயற்சி நிறைவேறும். அரசால் நன்மை வரும்.
பூரம்: தாயாருக்கும் உங்களுக்குமிடையே உறவு சீராகி நிம்மதி தரும்.
உத்திரம்,1: மகிழும்படும்படியான சம்பவங்கள் நடைபெறும்.

கன்னி:

உத்திரம்,2,3,4: மனக்குழப்பங்கள் அகலும். எதிரிகள் செய்த முயற்சிகள் தோற்றும்.
அஸ்தம்: வேலைப் பளு இருக்கும். உற்சாகத்துக்குக் குறைவில்லை.
சித்திரை, 1,2: பேச்சுத் திறனால் வியப்பூட்டுவீர்கள். செல்வம் சேரும்.

துலாம்:

சித்திரை, 3,4: வீடு அல்லது வாங்கும் முயற்சியில் தாமதம் ஏற்படும்.
சுவாதி: குடும்ப நலம் சிறக்கும். பண வரவில் மாற்றம் இருக்காது.
விசாகம் 1,2,3: வெற்றிகாரணமாக மனதில் உற்சாகமும் நிம்மதியும் வரும்.

விருச்சிகம்:

விசாகம்,4: பொது நலப்பணிகளில் ஈடுபாட்டால் வரவேற்பு அதிகரிக்கும்.
அனுஷம்: உங்களின் செயல் ஒன்றால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கேட்டை: புகழ் அதிகரிக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

தனுசு:

மூலம்: பேச்சும் செயலும் சிக்கலில் தள்ளக்கூடாது என்ற மிகுந்த கவனம் தேவை.
பூராடம்: யாரைப்பற்றியும் யாரிடமும் எந்த வம்பும் பேச வேண்டாம்.
உத்திராடம்,1: பக்தி செயல்களில் ஈடுபாடு சற்றே அதிகரிக்கும்.

மகரம் :

உத்திராடம்,2,3,4: உழைப்புக்கு ஏற்ற அளவே வருமானம் உணடு.
திருவோணம்: நல்ல செய்தி உண்டு. பணியாளர்களுக்கு நலன் கூடும்.
அவிட்டம்,1,2: பொறுமையைக் கட்டாயம் கைக்கொள்ள வேண்டும்.

கும்பம்:

அவிட்டம், 3,4: காலையில் வரும் தகவல் மன மகிழ்ச்சி தரும். மன நிறைவு உண்டு.
சதயம்: மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திக்க வாய்ப்பு வரும்.
பூரட்டாதி,1,2,3: கொஞ்சம் பணம் வரும். சிறிய செலவுகள் வரும். பாராட்டப்பெறுவீர்கள்.

மீனம்:

பூரட்டாதி, 4: புதிய மின் சாதனங்கள் வாங்குவீர்கள். கலையில் ஆர்வம் வரும்.
உத்திரட்டாதி: முயச்சி கூடும். செயல்கள் வெற்றி பெறும்.
ரேவதி: உங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேறுவீர்கள்.

10th August Today Raasi Palankal

Related posts

நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 44 பேர் பலி..!

Tharshi

விராட் கோலியை விட அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா..!

Tharshi

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மீண்டும் தலைவரானார் ரஷித்..!

Tharshi

Leave a Comment