குறும்செய்திகள்

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்..!

12 coastal cities in India at risk of going underwater

இந்தியாவின் 2,100 ஆம் ஆண்டுக்குள் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் இமயமலை உள்ளிட்ட பனிமலைகளிலும் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது.

அதில், 2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ள 12 நகரங்கள் வருமாறு :

குஜராத் மாநிலத்தில் கண்ட்லா 1.87 அடி, ஒக்ஹா 1.96 அடி, பவுநகர் 2.70 அடி

மகாராஷ்டிராவின் மும்பை 1.90 அடி

கோவாவின் மோர்முகாவ் 2.06 அடி

கர்நாடகாவின் மங்களூர் 1.87 அடி

கேரளாவின் கொச்சி 2.32 அடி

ஒடிசாவின் பரதீப் 1.93 அடி

கொல்கத்தாவின் கிதிர்பூர் 0.49 அடி

ஆந்திராவின் விசாகப்பட்டினம் 1.77 அடி

தமிழகத்தின் சென்னை 1.87 அடி, தூத்துக்குடி 1.9 அடி

தற்போதைய கால நிலையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர்மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 coastal cities in India at risk of going underwater

Related posts

நாட்டில் இன்று 3,142 பேருக்கு தொற்று உறுதி..!

Tharshi

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீப்பரவல்..!

Tharshi

23-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment