குறும்செய்திகள்

அதிகளவு தண்ணீர் பருகுவதை சுட்டிக்காட்டும் 6 அறிகுறிகள் எவையெனத் தெரியுமா..!

6 signs indicate drinking more water

ஆகக் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில் சாப்பிடும் பொருட்கள் மற்றும் உணவில் தண்ணீர் கலந்திருப்பதை உணராமல் நிறைய பேர் தண்ணீரை அதிகமாக பருகுகின்றனர்.

மனித உடலில் 80 சதவீதம் நீர் சூழ்ந்துள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும், செல் திசுக்களும் சரியாக செயல்படுவதற்கு உதவுகிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானதாகிறது. தினமும் குறைந்தபட்சம் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும் என்ற இலக்கை எட்டும் நோக்கத்தில் சாப்பிடும் பொருட்கள் மற்றும் உணவில் தண்ணீர் கலந்திருப்பதை உணராமல் நிறைய பேர் தண்ணீரை அதிகமாக உட்கொள்கிறார்கள். இதனால் அதிக நீரிழப்பு ஏற்படக்கூடும். பக்க விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

அதிக அளவு தண்ணீர் பருகுகிறீர்கள் என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள் எவையெனப் பார்ப்போம்.

1.சிறுநீரின் நிறம்: நீங்கள் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்களா? என்பதை கண்டறியும் சிறந்த வழிகளுள் ஒன்று, சிறுநீரின் நிறத்தை கண்காணிப்பதாகும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது மோசமான அறிகுறியாகும். அதாவது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதனை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருகிவர வேண்டும்.

சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவதே சரியானது. அது உடலில் நீர்ச்சத்து உகந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டும். ஆனால் சிறுநீர் வெள்ளை நிறத்தில் இருந்தால் அதிக நீரிழப்பு ஏற்படுவதாக அர்த்தம். அதாவது தண்ணீர் உட்கொள்ளும் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகும்போது இந்த பிரச்சினை எட்டிப்பார்க்கும்.

2. அடிக்கடி சிறுநீர் கழித்தல்: தண்ணீர் குடிக்கும் அளவு அதிகரிக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கும் அவஸ்தையை அனுபவிக்க நேரிடும். ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம்.

ஆனால் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் உடலுக்கு தேவையானதை விட அதிகமாக தண்ணீர் பருகுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. சோர்வு: அதிகமாக தண்ணீர் பருகினால் ‘ஹைபோநெட்ரீமியா’ பிரச்சினை ஏற்படும். இது ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பதன் அறிகுறியாகும். மேலும் அதிக படியான நீரிழப்பு ஏற்படுவதையும் வெளிக்காட்டும். அதிக அளவு நீர் பருகும்போது உடல் ஆற்றல் திறன் குறையும். மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகளும் தலைதூக்கும்.

4. பாதங்கள், கைகள், உதடுகளில் வீக்கம்: உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க நீர் உதவுகிறது. எலக்ட்ரோலைட்டுகள்தான் உடலின் ஆற்றல் மட்டத்தை உயர்த்த உதவுகின்றன. தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது, ​​இந்த சமநிலை மாறுபடும். எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ளும்போது கைகள், கால்கள் அல்லது உதடுகளில் வீக்கம் ஏற்படலாம். ஹைபோநெட்ரீமியா பாதிப்பையும் உணரலாம்.

5. தலைவலி, குமட்டல்: உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள சோடியம் அளவை குறைத்து, ஹைபோநெட்ரீமியா நிலைக்கு வழிவகுப்பதோடு மூளை செயல்திறனில் குறைபாடு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக தலைவலியை புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் அது அதிக நீரிழப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

6. தசை பலவீனம்: அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறையும் போது, ​​உடல் சமநிலை மாறுபடும். உடல் சோர்வை அனுபவிப்பதுடன் கை, கால்களில் நடுக்கம் மற்றும் வலியை உணரலாம். தசை பிடிப்பும் உண்டாகலாம். இதுவும் அதிகப்படியான நீரிழப்பின் அறிகுறியாகும்.

பெண்கள் உடலில் நீர்ச்சத்தை பேணுவது அவசியமானது. அதேவேளையில் எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

6 signs indicate drinking more water

Related posts

ஐ.பி.எல். கிரிக்கெட் : 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி..!

Tharshi

தைராய்டு ஏற்படுத்தும் உடல் பாதிப்புகள் என்னவென்று தெரியுமா..!

Tharshi

ஆசிரியரின் கேள்வியும் – மாணவனின் பாட்டும்.. : இறுதியில் நடந்தது என்ன..!!

Tharshi

Leave a Comment