குறும்செய்திகள்

ஐபோன் 13 சீரிஸ் மாடல் : அசத்தல் போர்டிரெயிட் மோட் அம்சங்களுடன்..!

Apple iPhone 13 to come with Portrait Mode video

அடுத்த மாதம் சர்வதேச சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் புதிய ஐபோன் சீரிசை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2021 ஐபோன் மாடல் விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய ஐபோனின் கேமரா விவரங்கள் வெளியாகியுள்ளன.

வீடியோக்களுக்கு ப்ரோ-ரெஸ், வீடியோவில் போர்டிரெயிட் மோட் மற்றும் புதிய பில்ட்டர் உள்ளிட்டவை ஐபோன் 13 சீரிஸ் கேமரா அம்சங்கள் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியாகும் ஐபோன்களில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக, ஐபோன் 7 பிளஸ் மாடலில் போர்டிரெயிட் மோட் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐ.ஓ.எஸ். 15 தளத்தில் பேஸ்டைம் மற்றும் இதனை இயக்கும் அனைத்து சாதனங்களிலும் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

இந்நிலையில், புதிய ஐபோன்களின் வீடியோவில் போர்டிரெயிட் மோட் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் சினிமேடிக் வீடியோ என அழைக்கப்படலாம்.

அத்துடன் ப்ரோ-ரெஸ் தரத்தில் வீடியோ எடுக்கும் வசதி ஐபோன்களில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Apple iPhone 13 to come with Portrait Mode video

Related posts

இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை..!

Tharshi

யாழில் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த இருவர் தற்கொலை..!

Tharshi

சீனாவில் தற்காப்பு கலை பள்ளியில் தீ விபத்து : 18 சிறுவர்கள் உடல் கருகி பலி..!

Tharshi

Leave a Comment